கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், மக்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பதால், அவர்கள் பொழுதுபோக்க, சமூக வலைதளம் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், செயலிகளின் பயன்பாடும் கணிசமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, பிரபலமான செயலியில் ஒன்றான TikTok, கூகுள் பிளே ஸ்டோரில் ஒரு பில்லியன் பதிவிறக்கத்தை கடந்துள்ளது.
அமெரிக்காவில், ஜனவரியில் மட்டும், Apple ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் Play Store-ல் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக டிக்டாக் மாறியது. மேலும், அதிகமானோர் வீடியோ ஸ்ட்ரீமிங் செயலிகளை பயன்படுத்துவதால், இது இணையத்தின் அலைவரிசையிலும் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும், டிக்டாக், ஸ்ட்ரீமிங் தெளிவுதிறனை குறைக்கவும் முடிவு செய்துள்ளது.
டிக்டாக்குடன் போட்டியிட, YouTube, குறுகிய வடிவ வீடியோ தளத்தின் வேலை செய்கிறது. அது, இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. 'ஷார்ட்ஸ்' என்று அழைக்கப்படும் இது, கூடுதல் அம்சமாக இருக்கும் என்றும், இதை மொபைல் செயலி மூலம் அணுகலாம் என்றும் கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்