சமூக வீடியோ செயலியான டிக்டோக் (TikTok) App Store-ரிலும், Google Play-விலும் உலகளவில் 1.5 பில்லியன் பதிவிறக்கங்களை எட்டியுள்ளது. மேலும் இந்தியா 466.8 மில்லியனுடன் அல்லது அனைத்து தனித்துவமான இன்ஸ்டால்களிலும் சுமார் 31 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளது. 2019-ஆம் ஆண்டில், இந்த செயலி 614 மில்லியன் பதிவிறக்கங்களைக் குவித்துள்ளது - இது கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகம் என்று மொபைல் உளவுத்துறை நிறுவனமான சென்சார் டவர் (Sensor Tower) தெரிவித்துள்ளது.
2019-ஆம் ஆண்டில் இந்தியா இதுவரை 277.6 மில்லியன் பதிவிறக்கங்களை அதிகரித்துள்ளது அல்லது உலகளாவிய இன்ஸ்டால்களில் சுமார் 45 சதவீதம் - சென்சார் டவர் [அறிக்கை] (https://sensortower.com/blog/tiktok-downloads-1-5-பில்லியன்). 45.5 மில்லியன் அல்லது 7.4 சதவிகிதத்துடன் சீனா இரண்டாவது பெரிய பதிவிறக்கங்களை உருவாக்கியது. அதே நேரத்தில் அமெரிக்கா 37.6 மில்லியன் நிறுவல்களுடன் 3 வது இடத்தில் உள்ளது.
"2019-ஆம் ஆண்டில் இந்தியா வேகமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 277.6 மில்லியன் பதிவிறக்கங்களை அதிகரித்துள்ளது அல்லது அனைத்து உலகளாவிய இன்ஸ்டால்களில் சுமார் 45 சதவிகிதம் ஆகும். அந்த எண்ணிக்கை நாட்டில் வாழ்நாள் பதிவிறக்கங்களில் 59.5 சதவிகிதத்தையும் குறிக்கிறது. இந்த ஆண்டு இதுவரை, சீனா இரண்டாவது பெரிய அளவு பதிவிறக்கங்கள் 45.5 மில்லியன் அல்லது 7.4 சதவிகிதத்துடன் உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா 37.6 மில்லியன் இன்ஸ்டால்களுடன் 3 வது இடத்தில் உள்ளது அல்லது சுமார் 6 சதவிகிதம் உள்ளது" என்று அறிக்கை குறிப்பிட்டது.
நாட்டில் மூன்றாம் தரப்பு ஆண்ட்ராய்டு கடைகளில் இருந்து இன்ஸ்டால்கள் இந்த எண்ணிக்கையில் இல்லை என்று சென்சார் டவர் தெரிவித்துள்ளது. தற்போது 614 மில்லியன் பதிவிறக்கங்களைக் கொண்ட டிக்டோக் (TikTok) இந்த ஆண்டின் மூன்றாவது அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேமிங் அல்லாத செயலியாகும். வாட்ஸ்அப் (WhatsApp) 707.4 மில்லியன் நிறுவல்களுடன் முதலிடத்திலும், பேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger) 636.2 மில்லியனுடனும் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
பேஸ்புக் (Facebook) 587 மில்லியன் பதிவிறக்கங்களுடன் நான்காவது இடத்திலும், இன்ஸ்டாகிராம் (Instagram) 376.2 மில்லியனுடனும் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நினைவுகூர, டிக்டோக் (TikTok) பிப்ரவரி 2019-ல் 1 பில்லியன் பதிவிறக்கங்களின் மைல்கல்லைக் கடந்தது. மேலும், 500 மில்லியன் இன்ஸ்டால்களை உருவாக்க ஒன்பது மாதங்களுக்கும் குறைவாகவே எடுத்துக் கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்