ஸ்விக்கி சூப்பர் இலவச டெலிவரி: சொமாட்டோவிற்கு போட்டியாக புதிய கட்டண சேவை

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
ஸ்விக்கி சூப்பர் இலவச டெலிவரி: சொமாட்டோவிற்கு போட்டியாக புதிய கட்டண சேவை
ஹைலைட்ஸ்
  • ஸ்விக்கி சூப்பர் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
  • ஒரு மாதம், மூன்று மாதம் என இரு வகை பிளான்கள்
  • ஸ்விக்கி சூப்பர் சிறப்பு சேவைகளைப் பெற 99ரூபாய்க்கு ஆர்டர் செய்யவேண்டும்

 

ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து டெலிவரி செய்வதில் இந்தியாவின் முன்னணி தளமான ஸ்விக்கி, புதிய கட்டண சேவையை தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. எல்லா நேரத்திலும், ஆர்டர் செய்யக்கூடிய பகுதியில் உள்ள எல்லா உணவகங்களில் இருந்தும் இலவச டெலிவரியை இச்சேவையில் பெறலாம். இலவச டெலிவரியோடு, எந்நேரத்திலும் கூடுதல் விலை (surge pricing) கொடுக்கத் தேவை இன்றி சாதாரண விலைக்கே உணவினை ஆர்டர் செய்துகொள்ளலாம். குறைகளைத் தீர்ப்பதிலும் ஸ்விக்கி சூப்பர் சந்தாதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இது ஒரு மாதம், மூன்று மாதம் என இரண்டு பிளான்களாக அறிமுகம் ஆகிறது. ஒரு மாதத்துக்கான கட்டணம் 99-149 ரூபாயாக இருக்கும். மூன்று மாதத்துக்கான கட்டணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இந்தியா முழுவதுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இப்புதிய கட்டண சேவை அறிமுகம் ஆகிறது. வரும் மாதங்களில் இது அனைவருக்கும் விரிவுப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் புதிய சலுகைகளையும் எதிர்காலத்தில் ஸ்விக்கி சூப்பர் சந்ததாரர்களுக்கு அளிக்க இருக்கிறார்கள்.

இதன் மூலம் மூன்று வகையான கட்டண சேவைத்திட்டங்களை வழங்கி வரும் சொமாட்டோவிற்குப் போட்டியாக ஸ்விக்கியும் களத்தில் குதிக்கிறது. சொமாட்டோ ட்ரீட்ஸ் ஆண்டுக்கு 249ரூபாய், இதில் ஒவ்வொரு ஆர்டரின்போதும் ஒரு இனிப்பு இலவசமாகக் கிடைக்கும். இது தவிர சொமாட்டோ பிக்கிபாங்க், குறிப்பிட்ட சில உணவகங்களுக்குச் சென்று சாப்பிடும்போது மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் சொமாட்டோ கோல்டு ( உணவு 1+1, பானங்கள் 2+2) ஆகிய சேவைகளையும் சொமாட்டோ ஏற்கனவே வழங்கிவருகிறது.

 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
  1. ரெட்மி நோட் 9 ப்ரோ அடுத்த விற்பனை எப்போது? விலை, சிறப்பம்சங்கள் விவரம்!!
  2. அட்டகாசமான பட்ஜெட் மொபைல்!! சாம்சங் கேலக்ஸி எம். 11 - எம் 01; விலை & சிறப்பம்சங்கள்
  3. சீனாவில் அறிமுகமானது விவோ எக்ஸ் 50 சீரிஸ்கள்: விலை, சிறப்பம்சங்கள் விவரம்!
  4. அடேங்கப்பா! 34 மணிநேர பேட்டரி பேக் - அப்; அசர வைக்கும் டெல் லேப்டாப்
  5. குறைந்த விலையில் சாம்சங்கின் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் நாளை வெளியாகிறது!
  6. இந்தியாவில் ரெட்மி 8, ரெட்மி நோட் 8, ரெட்மி 8A டுயல் போன்களின் விலை திடீர் உயர்வு!
  7. ஒன்பிளஸ் 8-ன் அடுத்த விற்பனை ஜூன் 4 ஆம் தேதி தொடங்குகிறது!
  8. நோக்கியாவின் மூன்று புதிய போன்கள் அறிமுகம்!
  9. இன்பினிக்ஸ்-ன் இரண்டு ஸ்மார்ட்போன்கள் நான்கு பின்புற கேமராக்களுடன் அறிமுகம்!
  10. விவோ எக்ஸ் 50 சீரிஸின் விவரங்கள் கசிந்தன!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com