அனைத்து இடங்களிலும் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
Photo Credit: YouTube/ Swiggy India
ஸ்விக்கி நிறுவனம், தனது புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான 'ஸ்விக்கி டெய்லி'-யை திங்கட்கிழமையான இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டு உணவுகளை மட்டுமே முக்கியமாக குறிவைக்கப்பட்டுள்ள இந்த செயலியில், வீட்டில் தயாரிக்கப்படவுள்ள உணவுகள் மட்டுமே அறிமுகமாகவுள்ளது. இது குறித்து ஸ்விக்கி நிறுவனம், இந்த சேவை முதலில் குருகிராமில் மட்டுமே அறிமுகமாகிறது, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய இடங்களில் பின்னர் அறிமுகமாகும் என கூறியுள்ளது.
இந்த செயலியில் நாம் உணவை ஆர்டர் செய்துவிட்டு, எப்போது அந்த உணவு நமக்கு வந்து சேர வெண்டும் எனவும் ப்ளான் செய்துகொள்ளலாம். மேலும், இந்த செயலியில் வாரம், மாதம் மற்றும் வருட சந்தாவிலும் உணவுகளை பெற்றுக்கொள்ளலாம்.
"தரம் மற்றும் குறைந்த விலையிலான உணவுகளின் தேவை தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் வீட்டிலேயே உணவு தயாரிக்கும் சமையல்காரர்கள் மற்றும் வீட்டு உணவை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் அனைவரையும் ஒரு இடத்தில் இணைத்துள்ளோம். இனி இந்த ஸ்விக்கி டெய்லி தரமான குறைந்த விலையிலான உணவுகளின் தேவைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.", என ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.
இது குறித்து ஸ்விக்கி நிறுவனத்தின் அலோக் ஜெய்ன் கூறுகையில்,"இந்தியாவில் இம்மாதிரியான உணவுகளை வழங்கும் நிறுவனங்கள் ஒரு அமைப்பு இன்றியே இயங்குகிறது. மேலும் வீடுகளில் உணவு தயாரிக்கும் சமையல்காரர்களும், ஒரு அமைப்பு இன்றியே தங்கள் அருகில் உள்ள வீடுகள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றிற்கே அவ்வப்போது ஏற்படும் தேவைக்கு ஏற்ப உணவுகளை தயாரிக்கின்றனர்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில்," இம்மாதிரியான சேவையை இந்தியாவில் வழங்கும் முதல் நிறுவனம் இந்த ஸ்விக்கி டெய்லி தான்.", என்று கூறியுள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India