சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஸ்னாப்சாட் ஆப் மூலம் அமேசான் ஷாப்பிங் செய்யும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
'விஷுவல் செர்ச்' எனப்படும் செயல்பாட்டின் மூலம், ஸ்னாப்சாட் கேமரா பயன்படுத்தி அமேசான் பொருட்களை ஷாப்பிங் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாப்பிங் செய்ய விருப்பமுள்ள பொருட்களின் புகைப்படங்களை அல்லது பார்கோட்களை ஸ்னாப்சாட் கேமரா மூலம் ஸ்கான் செய்தால், அமேசான் இணையதளத்தை அடைகின்றது. மேலும், நாம் ஷாப்பிங் செய்ய விருப்பமுள்ள பொருட்களின் ஆப்ஷன்களையும் காண்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது என்று ஸ்னாப்சாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
'பாயிண்ட் அண்டு பை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வசதி மூலம், வாடிக்கையாளர்கள் எளிதாக ஷாப்பிங் செய்யலாம் என்று ஸ்னாப்சாட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இனி, சாட் ப்ளஸ் ஷாப்பிங் ஒரே ஆப்-பில்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்