இன்று டிஜிட்டல் மோகம் அனைத்து தரப்பான வயதினரிடையேயும் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவு என்னவாக இருக்கிறது என்றால், இந்த மோகம் தற்கொலை மற்றும் இறப்புகளில் சென்று முடிகிறது. இந்த மோகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது. இந்த டிஜிட்டல் போதை சமீபத்தில், 'தமிழகத்தில் கடந்த வாரம் டிக்-டாக் செயலியால் தற்கொலை செய்து இறந்து போன ஒரு 24 வயதான பெண்' மற்றும் 'மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி விளையாடியாதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோன 16 வயது சிறுவன்' என்று வெளியான இரண்டு செய்திகளுக்கு பின் அனைவரின் கவணத்தையும் பெற்றுள்ளது. உளவியல் நிபுணர்களோ மது போதைய விட இந்த டிஜிட்டல் போதை மிகவும் ஆபத்தானது என்கிறார்கள். அவ்வளவு ஆபத்தானதா இந்த டிஜிட்டல் போதை, இதிலிருந்து எப்படி வெளியேறுவது, உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் இதோ!
"இதிலிருந்து வெளியேற மக்கள் இரண்டு விஷயங்களை பின்பற்ற வேண்டும். முதலில், அவர்கள் வேலை, இல்லற வாழ்வு, வெளியுலக வாழ்கை மற்றும் சமூகத்துடனான ஒருங்கிணைப்புகள் ஆகியவற்றை சரிவர சமனில் வைத்துக்கொள்ள வெண்டும். மற்றொன்று, ஒருவர் தேவையான அளவு துக்கத்தை எடுத்துக்கொள்கிறார்களா என்பதை உறுதி செய்துகொள்ள வெண்டும்.", என்கிறார் ஃபோர்டிஸ் ஹெல்த்கேரை சேர்ந்த மனநலம் மற்றும் நடத்தை அறிவியல் துறையின் இயக்குனர் சமீர் பரிக் (Samir Parikh).
பரிக் மேலும் கூறுகையில், ஒருவர் ஒரு வாரத்தில் ஒரு முறையாவது குறைந்தது 4 மணி நேரம் 'டிஜிட்டல் டிடாக்ஸ்' (digital detox) செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் என்கிறார். இந்த 'டிஜிட்டல் டிடாக்ஸ்' என்பது என்னவென்றால், எந்த ஒரு மின்னனு சாதனங்களையும் பயன்படுத்தாமல் இருப்பது.
"ஒருவர், இந்த 4 மணி நேரத்தில் எந்த ஒரு மின்னனு சாதனங்களையும் பயன்படுத்தாமல் இருப்பதில் சிரமப்படுகிறார் என்றால் அவர் கவணிக்க வேண்டிய ஒரு பிரச்சனையில் இருக்கிறார் என்று அர்த்தம்.", என்கிறார் பரிக்.
மேலும் புது டெல்லியை சேர்ந்த இந்திரபிரசாதா அப்போலோ மருத்துவமனையின் உளவியல் துறையின் மூத்த ஆலோசகரான சந்தீப் வோஹ்ரா இது குறித்து கூறுகையில்,"எந்த ஒரு போதையை விட இந்த டிஜிட்டல் போதை என்பது மிகவும் ஆபத்தானது. இந்த டிஜிட்டல் போதையின் அறிகுறி என்னவென்றால், உங்கள் அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்டு செயல்படுவீர்கள்" என்கிறார்.
மேலும் ஒருவர் இந்த டிஜிட்டல் போதைக்கு அடிமையானால் மனச்சோர்வு, பதட்டம், தூக்கமின்மை, எரிச்சல் மற்றும் பிற விஷயங்களில் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள் என்கிறார் வோஹ்ரா.
இந்த போதையால் பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். "ஒருவேளை, குழந்தைகள் அதிக நேரம் டிஜிட்டல் திரைகளுக்கு முன்பு செலவிடுகிறார்கள் என்றால், அது கவணிக்கப்பட வேண்டிய ஒன்று. பேற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்த மோகத்திலிருந்து வெளிக்கொண்டு வர பெரிதும் பங்காற்ற வேண்டும். அவர்களின் கவணத்தை மற்ற செயல்களில் திருப்ப வேண்டும். உள்விளையாட்டு வெளிவிளையாட்டு, குடும்பத்தினருடனான ஒருங்கிணைப்புகள் போன்றவற்றில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். அவர்களுக்கு பிடித்த மற்ற செயல்களை கண்டறிந்து அதில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்" போன்றவாறான ஆலோசனைகளை வழங்குகிறார் பரிக்.
''ஒருவேளை குழந்தைகள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதிக நேரங்களை ஸ்மார்ட்போன் திரைக்கு முன் போக்குகின்றனர் என்றால், பெற்றோர்கள் அவர்களுடன் உரையாட வேண்டும், அவர்களின் கவணத்தை வேறு பக்கம் மாற்ற வேண்டும். அவர்களை அந்த போதையிலிருந்து வெளிக்கொண்டுவர வேண்டும்.", என்கிறார் வோஹ்ரா.
முன்பு கூறியதுபோல, இந்த டிஜிட்டல் போதை என்பது மற்ற அனைத்து போதைகளை விட மிகவும் ஆபத்தானது. இதன் விளைவு என்னவாக இருக்குமென்றால், உங்களுக்கே தெரியாமல், உங்களை மரணத்திற்கு அருகில் அழைத்து செல்லும். அதுவும் குழந்தைகளுக்கு, இதுகுறித்த அறிவு என்பது மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த கட்டுரை முக்கியமாக பெற்றோர்கள் கவண்த்திற்குதான். அவர்கள்தான், அவர்களின் குழந்தைகளை இம்மாதிரியான பிரச்சனைகளிலிருந்து காக்க வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்