"நான் அவனை அழைத்தபோது கூட என்னை கவணிக்காமல்,'சுடு! சுடு!' என்றே கத்திக்கொண்டிருந்தான்", இறந்த இளைஞனின் தந்தை.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு 16 வயது இளைஞன், தன்னுடைய ஸ்மார்ட்போனில் தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி விளையாடியதின் விளைவாக மாரடைப்பு காரணமாக உயிரிந்தார். தொடர்ந்து பல மணி நேரம் பப்ஜி விளையாடியதின் விளைவாக உயிரை இழந்த இந்த இளைஞன், மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஃபர்கான் குரேசி (Furkan Qureshi) என்பது தெரியவந்துள்ளது. இவர் 12ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவர். இந்த சம்பவம், கடந்த மே 28-ஆம் தேதி ஒரு திருமன நிகழ்விற்காக, குடும்பத்துனருடன் சென்ற போது ஏறப்பட்டது என்கிறார், அந்த மாணவனின் தந்தை ஹரூன் ரசித் குரேசி (Haroon Rasheed Qureshi)
"அவன் ஒரு சுறுசுறுப்பான பையன். ஆனால், சமீப காலமாக பப்ஜி விளையாட்டுக்குள் மூழ்கிவிட்டான். முன்னதாக, ஞாயிறு மாலையிலிருந்து திங்களின் அதிகாலை வரை பப்ஜி விளையாட்டையே விளையாடிக்கொண்டிருந்தான். திங்கட்கிழமையன்று நான் அவனை அழைத்தபோது கூட என்னை கவணிக்காமல்,"சுடு! சுடு!" என்றே கத்திக்கொண்டிருந்தான்", என மிக வருத்தத்துடன் அந்த மாணவனுடைய தந்தை ரசித் குரேசி கூறினார்.
இந்த மானவனுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்,"சிறிது நேரமே தூங்கிய ஃபர்கான், காலையில் எழுந்தவுடன் காலை உணவு உண்டுவிட்டு மீண்டும் பப்ஜி விளையாட துவங்கினான். நீண்ட நேரம் அந்த பப்ஜியை விளையாடிய அவன், மாரடைப்பு ஏற்படுவதற்கு முன், அந்த விளையாட்டில் ஆட்டமிழந்ததை அடுத்து 'அவனை சுடு! அவனை சுடு!' என்று கத்திக்கொண்டிருந்தான்." என்று குரேசி கூறுகிறார்.
அந்த இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். ஆனால், அதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார்.
அந்த மாணவனுக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அசோக் ஜெய்ன் கூறுகையில்,"என்னுடைய மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை மேற்கொண்டேன். அவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. பின் பார்த்ததில், அவருடைய இதயத்துடிப்பு முற்றிலும் நின்றுவிட்டது. நான் என்னால் இயன்ற வரை முயற்சித்தேன், ஆனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே அவர் இறந்து போயிருந்தார்." என்றார்.
மற்றொரு இருதய நிபுனரான விபுல் கார்க்,"இந்த காலத்தில் குழந்தைகள், மொபைல் விளையாட்டுகளுக்கு மிகுதியாக அடிமைப்பட்டுள்ளனர். குழந்தைகளிடமிருந்து இந்த மொபைல்போன்கள் சற்று தள்ளி இருப்பது போன்றே பார்த்துக்கொள்ள வேண்டும்." என்றார்.
அந்த இளைஞனின் இறப்பு என்பது மொபைல்போனினால் ஏற்பட்டதால், நாங்கள் எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளவில்லை" என்கிறார் காவல்துறை ஆய்வாளர், அஜய் சர்வன் (Ajay Sarwan).
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Pad 5 Will Launch in India Alongside Oppo Reno 15 Series; Flipkart Availability Confirmed