கடந்த மாதம் தேர்தல் ஆணையம் சமூக வலைதள உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதில், விதிகளை மீறும் பதிவுகளை நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரின்பேரில் 500 போஸ்ட்களை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது. இதேபோன்று ட்விட்டர் மற்றும் வாட்ஸப்பும் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி திரேந்திரா ஓஜா, 'தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது போன்ற பதிவுகள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து புகார் அளித்தோம். இதன்படி ஃபேஸ்புக்கில் 500 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
ட்விட்டரில் 2 பதிவுகளும், வாட்ஸப்பில் ஒன்றும் நீக்கப்பட்டுள்ளன. இன்னும் விதிகளை மீறிய பதிவுகள் சமூக வலைதளங்களில் காணப்படுகின்றன. அவற்றை நீக்கும்படி சமூக வலை தளங்களுக்கு புகார் அளித்துள்ளோம்' என்றார்.
கடந்த மாதம் தேர்தல் ஆணையம் சமூக வலைதள உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதில், விதிகளை மீறும் பதிவுகளை நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Elon Musk’s xAI Releases Grok 4.1 AI Model, Rolled Out to All Users