ஜாக்பாட்! ஒரு கனெக்‌ஷனில் இரண்டு சேவை தரும் ஜியோ!

ஜாக்பாட்! ஒரு கனெக்‌ஷனில் இரண்டு சேவை தரும் ஜியோ!
ஹைலைட்ஸ்
  • ஜியோ ஃபைபர் பயனர்கள் ஜியோடிவி+ செயலியை பெறலாம்
  • இதில் பல மொழிகளில் டிவி சேனல்களை பார்க்கலாம்
  • சாம்சங் டிவிகளில் ஜியோடிவி+ ஆப்ஸ் கிடைக்காது
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது  JioTV+ வசதி பற்றி தான். 

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் Jio நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து பல அப்டேட்களை செய்து வருகிறது. அதாவது ரிலையன்ஸ் Jio நிறுவனம் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து அதன் வணிகத்தை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக Jio Fiber மற்றும்  Air Fiber வழியாக ஃபைபர் இணைப்பை விரிவுபடுத்தி உள்ளது. இப்போது நிறுவனம் JioTV+ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பயனர்கள் ஒரு ஜியோ Air Fiber இணைப்புடன் இரண்டு டிவிகளை இணைக்க முடியும் என தெரிவித்துள்ளது. 10க்கும் மேற்பட்ட மொழிகள் மற்றும் 800க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல்களுக்கான வாடிக்கையாளர்கள் காணமுடியும் என தெரிவித்துள்ளது. JioTV+  செயலி இப்போது அனைத்து முன்னணி ஸ்மார்ட் டிவி OSகளிலும் இலவசமாக டவுண்லோடு செய்ய முடியும். ஆனால் சாம்சங் டிவிகளில் மட்டும் கிடைக்காது என சொல்லப்படுகிறது. ஆண்ட்ராய்டு மூலம் இயங்காத சாம்சங் டிவிகளை வைத்திருப்பவர்கள் இந்த ஆப்ஸை அணுக முடியாது.  ஜியோடிவி+ செயலி ஆண்ட்ராய்டு டிவி , ஆப்பிள் டிவி மற்றும் அமேசான் ஃபயர்ஸ்டிக் டிவியில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது

பயனர்கள் சேனல்கள் மற்றும் ஓடிடி சேவையை என இரண்டையும் பயன்படுத்த முடியும். கிட்டதட்ட 13 ஓடிடி சேவைகளையும் வழங்குகிறது. இதில்  பொழுதுபோக்கு, செய்திகள், விளையாட்டு, இசை, குழந்தைகள், வணிகம் மற்றும் பக்தி உட்பட 800க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல்கள் இதில் உள்ளன.  Jio Fiber அனைத்து திட்டத்திலும் இதை பெற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டங்களான ரூ.599, ரூ.899 மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்திலும் இந்த சேவைகள் கிடைக்கின்றன. மேலும் ஜியோசினிமா பிரீமியம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜீ5 மற்றும் ஃபேன்கோட் போன்ற 13 பிரபலமான OTT பயன்பாடுகளிலிருந்து வீடியோ பார்க்கலாம். 

ஆண்ட்ராய்டு டிவி சாதனங்களுக்கான கூகுள் ப்ளே ஸ்டோர் வழியாக ஜியோடிவி+ செயலியை பயனர்கள் பதிவிறக்கம் செய்யலாம். அதே போல Apple TV, Amazon  Fire OS மூலம் இயங்கும் டிவிகளுக்கான பயன்பாட்டைப் பெறலாம். ஸ்மார்ட் டிவி இல்லாத பயனர்கள் அதை அணுகுவதற்கு STB என்ற கருவியை கூடுதல் இணைப்பாக வாங்க வேண்டும்.

இந்தியாவில் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கு இது நடைமுறைக்கு வரும் என ஜியோ அறிவித்துள்ளது.ஜியோசேஃப், கால் வசதி, எஸ் எம் எஸ் அனுப்புதல் மற்றும் பைல் பரிமாற்றங்களுக்கான குவாண்டம்-பாதுகாப்பான தகவல் தொடர்பு செயலி, மாதத்திற்கு ரூ. 199 விலையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் ஜியோ டிரான்ஸ்லேட், குரல் அழைப்புகள், செய்திகளை மொழிபெயர்ப்பதற்கான AI மூலம் இயங்கும் பல மொழி தொடர்பு பயன்பாடாகும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: jiotv app, JioTV Plus, JioTV Plus app, Reliance Jio
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

விளம்பரம்

© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »