ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்குச் சொந்தமான JioSaavn மலிவான ஆண்டுத் திட்டத்தை (Annual Plan) அறிவித்துள்ளது
Photo Credit: JioSaavn
வருடாந்திர சந்தாவுடன் பயனர்கள் விளம்பரமில்லா இசை ஸ்ட்ரீமிங்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
இசைப் பிரியர்களுக்கு, குறிப்பாக விளம்பரங்களின் தொந்தரவு இல்லாமல் பாட்டு கேட்க விரும்புறவங்களுக்கு ஒரு சூப்பரான சலுகையை JioSaavn நிறுவனம் அறிவிச்சிருக்காங்க. ரிலையன்ஸ் ஜியோவின் இந்த மியூசிக் ஸ்ட்ரீமிங் தளமானது, தன்னுடைய JioSaavn Pro சந்தாவுக்கு, மிக மிகக் குறைந்த விலையில் ஒரு ஆண்டுத் திட்டத்தை (Annual Plan) கொண்டு வந்திருக்கு. JioSaavn அறிவித்துள்ள இந்த புதிய ஆண்டுத் திட்டத்தோட விலை வெறும் ₹399 மட்டுமே! இது ஒரு லிமிடெட் டைம் ஆஃபர் ஆகும். இந்த பிளான், ஒரு சாதாரண மாதச் சந்தாவைவிட (மாதம் ₹89) ரொம்ப ரொம்ப கம்மி விலையில் ஒரு வருடத்திற்கான அனைத்து பிரீமியம் சலுகைகளையும் வழங்குது.
இந்த ₹399 ஆண்டுத் திட்டமானது, புதிய வாடிக்கையாளர்களுக்கும், அதே சமயம் கடந்த 12 மாதங்களுக்குள் JioSaavn Pro சந்தாவை எடுத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கும் மட்டுமே கிடைக்கும்.
இந்த JioSaavn Pro சந்தாவை எடுக்கும்போது உங்களுக்குக் கிடைக்கும் முக்கியப் பலன்கள் இவைதான்:
இந்த புதிய சலுகையை JioSaavn செயலியின் உள்ளேயும் (App), அல்லது இணையதளம் (Website) மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும். இது ஆன்டிராய்டு (Android), ஐஓஎஸ் (iOS), மற்றும் டெஸ்க்டாப் உட்பட அனைத்து தளங்களிலும் வேலை செய்யும்.
இந்தியாவில் மியூசிக் ஸ்ட்ரீமிங் சந்தையில் Spotify, YouTube Music போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக்கிட்டு இருக்குற இந்த நேரத்துல, JioSaavn கொண்டு வந்திருக்கும் இந்த மலிவு விலை ஆண்டுத் திட்டம், நிச்சயமா நிறைய யூசர்களை Pro சந்தாவுக்கு மாற்றும்னு எதிர்பார்க்கப்படுது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Assassin's Creed Shadows Launches on Nintendo Switch 2 on December 2