ஆண்டுராய்டு மட்டும் ஜ.ஓ.எஸ் போன்களுக்கு ஜியோ டிவி ஆப் தனது புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இன்டர்ஃபேஸ் டிசைன் மூலம் உள்ளே இருக்கும் தொடர்களை ஹைலைட் செய்து காட்ட முடிகிறது.
ஜியோ டிவி பற்றி அறிமுகம் இல்லாதவர்களுக்கு, இந்த ஆப் மூலம் தொலைக்காட்சியை பார்க்க முடியாதவர்களோ அல்லது பிடிக்காதவர்களோ தங்களது விருப்பமான தொடர்கள் மற்றும் ஷோக்களை, தொலைக்காட்சியால் ஓளிபரப்பாகும் அதே சமையத்தில் ஜியோ டிவி ஆப்பில் இலவசமாக ஜியோ வாடிக்கையாளர்களால் பார்க்க முடிகிறது.
தொடர்களின் வகைப்படி பிரித்து கண்டெண்டுகளை தன்னிப்படுத்தி வாசகர்களுக்கு எளிதாக்குகிறது. மேலும் ஜியோ நிறுவனம் ஜியோ கிரிக்கெட் ஹெச்டி என்னும் புதிய சேனலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேனலில் இந்தியா பங்குபெறும் அனைத்து போட்டிகளும் லைவ் செய்யப்படவுள்ளது.
மேலும் ஜியோ கிரிக்கெட் ஹெச்டி சேனலில் முக்கிய போட்டிகள் மற்றும் கிரிக்கெட் தொடர்களை கண்டுகளிக்க முடிகிறது. இந்த சேனல் ஆங்கிலம் மட்டும் நான்கு வாட்டார மொழிகளில் ஓளிபரப்பு செய்யப்படுகிறது. ஸ்டார் இந்தியா அடுத்த 5 வருடங்களுக்கு தனது தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகிய இன்டர்நேஷனல் மற்றும் உள்ளூர் போட்டிகளை கண்டுகளிக்க முடிகிறது.
இந்த சேனலை பார்க்க, உபயோகத்தில் இருக்கும் ஒரு ஜியோ எண் மட்டுமே போதும் தனியாக கட்டங்கள் ஏதும் தேவையில்லை. மேலும் பிடித்த சேனல்களை முக்கியத்துவம் கொடுத்து பார்க்கும் வசதி மற்றும் பிடித்த நிகழ்ச்சிகளை பதிவு செய்து கொள்ளும் வசதி என வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த அப்டேட் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஆண்டிராய்ட் போன்களுக்காக ஜியோ செய்த புதிய அறிமுகம்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்