ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நெடுநாட்களுக்கு பிறகு புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய செயலியான 'ஜியோ டாக்' மூலம் கான்ஃபிரன்ஸ் கால்களை செய்ய முடிகிறது.
இந்த ஜியோ குரூப் டாக் மூலம் பத்து நபர்களை ஒரே சமத்தில் இணைக்க முடிகிறது. மேலும் இந்த செயலியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள லெக்சர் மோட் (lecture mode) காலில் இருபவர்களை மியுட் செய்யும் வசதி போன்ற பல முக்கிய அம்சங்களுடன் வெளியாகிறது. சோதணை கட்டத்தில் இருக்கும் இந்த செயலி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.
மேலும் இந்த செயலி ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஹெச்டி காலிங் என்னும் சிறப்பு வசதியை அறிமுகபடுத்தியுள்ளது. தற்சமையம் ஆண்டுராய்டுகளுக்கு மட்டுமே இந்த செயலி அறிமுகமாகும் நிலையில், விரைவில் ஐஓஎஸ் தளங்களில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.
மேலும் இந்த ரிலையன்ஸ் ஜியோ குரூப் டாக் ஆப்பில் ஓரே சமையத்தில் 10 நபர்களையும் தேர்ந்தெடுக்க முடியும். இந்த வசதி மூலம் தனித்தனியாக தேர்வு செய்வு செய்யும் குழப்பம் இனி வேண்டாம். அதுபோல் இனி எந்த காலர்கள் வேண்டும் வேண்டாம் எனவும் நம்மால் தேர்வு செய்ய முடியும்.
தற்போது வாய்ஸ் கால்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் வீடியோ குரூப் கால்களும் செய்யும் வசதியும் வரலாம் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்