ஆண்ட்ராய்டு போன்களில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 'வாட்ஸ் ஆப் பிஸ்னஸ்' அறிமுகமாகிய நிலையில் ஐபோன் வாடிக்கையாளர்கள் இந்த அப்டேட்டிற்காக வெகு நாள் காத்திருந்தனர். இந்நிலையில், ஐபோனுக்கான வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் சில நாடுகளில் அறிமுகமாகியுள்ளதாக தகவல் கசிதுள்ளது.
மெக்சிக்கோ, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த அப்டேட் பரவலாக வெளியாகியுள்ளதாகவும் உடனடியாக பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றாலும் இன்னும் சில நாட்களில் இந்த அப்டேட்டை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த புதிய அப்டேட் இந்தியாவில் எப்போது வெளிவரும் என்று தெரியவில்லை. ஆனால் வாட்ஸ் ஆப் நிறுவனம் சார்பில் இந்த புதிய வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் பற்றி எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை.
இந்த வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் ஆப் மூலம் வணிகம் செய்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் தங்களது தயாரிப்புகள் மற்றும் இதர தகவல்களைப் பகிர முடியும் எனப்படுகிறது. இதுவரை சுமார் 5 மில்லியன் மக்கள் இதைப் பயன்படுத்தி வருவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் வாட்ஸ் ஆப், சில முக்கிய அப்டேட்களான வேகமாக பதில் அளிக்கும் வசதி உள்ளிட்டவையை அறிமுகம் செய்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்