இன்ஸ்டாகிராமின் இந்த புதிய முயற்சிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் ஸ்நாப் சாட் உள்ளது
பேஸ்புக்கின் மற்றொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் கூறுகையில், இந்த புதிய ஆப்ஷன் மூலம் ‘Close Friends' க்கான சிறிய குழுவினை உருவாக்கி அதில் ஸ்டோரியினை ஷேர் செய்யலாம். இன்ஸ்டாகிராமினை பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த சிறிய குழுவினை உருவாக்கி பயன்படுத்த முடியும்.
நீங்கள் ஒருவருடைய நெருக்கமான நண்பர்கள் லிஸ்ட்டில் இருந்தால் அவர்களுடைய புரோஃபைல் போட்டோவிலிருக்கும் பச்சை நிற வட்டத்தில் இருக்கும் ஸ்டோரியினைக் காணமுடியும். நீங்கள் அந்த ஸ்டோரியை பார்த்தால், அதில் பச்சை நிற பேட்ஜ் தோன்றும் என்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.
வருவாய் ஈட்டுதலில் இன்ஸ்டாகிராம் வளர்ந்து வருவதால், பேஸ்புக் தனது முழு கவனத்தையும் இன்ஸ்டாகிராம் மீது செலுத்தி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த அடாம் மூசோரி அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராமின் இந்த புதிய முயற்சிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் ஸ்நாப் சாட் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
ACT Fibernet Launches Revamped Broadband Plans Starting at Rs. 499