பேஸ்புக் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணிபுரிந்து வந்த ஆதாம் முசேரியை, இன்ஸ்டாகிராமின் புதிய தலைவராக பேஸ்புக் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.
கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் தலைவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராமின் இணை நிறுவனர் மைக் கிரிஜர், கடந்த திங்களன்று ஆதாம் முசேரியை புதிய தலைவராக தனது நிறுனத்தின் இணைய பக்கத்தில் அறிவித்தார்.
ஆதாம் முசேரி (35) பேஸ்புக் நிறுவனத்தில் டிசைனராக தனது பணியை தொடங்கினார். இந்தப் பதவிக்கு ஆதாம் முசேரி பொருத்தமானவராக இருப்பார் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் கடந்த 2010 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமினை 1 மில்லியின் டாலருக்கு வாங்கியது. அதுவே பேஸ்புக் நிறுவனம் முதன் முதலில் அதிக விலை கொடுத்து பெற்ற சமூக வலைதளம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்