Instagram வீடியோ போடுபவரா நீங்கள்? கட்டாயம் இது தெரியணும்!

Instagram வீடியோ போடுபவரா நீங்கள்? கட்டாயம் இது தெரியணும்!

Photo Credit: Gadgets 360

ஹைலைட்ஸ்
  • இன்ஸ்டாகிராம் ரீல்ஸிற்கான புதிய மல்டி-ட்ராக் ஆடியோ அம்சத்தை அறிவித்துள்ளத
  • ஒரு ரீலில் 20 ஆடியோ டிராக்குகள் வரை சேர்க்க இது பயனர்களுக்கு உதவுகிறது
  • குறுகிய வடிவ உள்ளடக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக தளம் சமீபத்தில் வெளிப்
விளம்பரம்

இன்ஸ்டாகிராம்  ரீல்ஸ் வீடியோக்களுக்கு என்றே  புதிய Multi-Audio Track அம்சத்தை வெளியிட்டது. Instagram இப்போது நீண்ட வீடியோக்களை விட குறுகிய வீடியோவிற்கு முன்னுரிமை அளிக்கும் என்று அந்நிறுவன தலைமை அதிகாரி Adam Mosseri கூறியுள்ளார். எனவே இன்ஸ்டாகிராம் ரீல்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. Instagram பயனர்கள் இப்போது ஒரே இன்ஸ்டாகிராம் ரீலில் பல ஆடியோ டிராக்குகளைச் சேர்க்கலாம். இதனால் அவர்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தியே பல ஆக்கப்பூர்வமான வீடியோக்களை உருவாக்க முடியும்.

இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் மல்டி-ஆடியோ டிராக் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து பயனாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்டாகிராமில் ஒரு ரீலில் பயனர்கள் 20 ஆடியோ டிராக்குகள் வரை சேர்க்கலாம். ஆடியோவை எழுத்துகளுடன் சேர்த்து எடிட் செய்யலாம். ஸ்டிக்கர்கள், கிளிப்புகள் மற்றும் பிற ஆப்ஷன்களை கொண்டு ரீலைத் திருத்தலாம். ஆடியோ கிளிப்புகளை ஒன்றுடன் ஒன்று சேர்க்கலாம். இப்படி பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. 


ரீல்ஸ் வீடியோ உருவாக்கும் போது அதன் ஆப்ஷன்கள் சேமிக்கப்படும். இதனால் ஏற்கனவே பயன்படுத்திய ஆடியோ கிளிப்களை மீண்டும் பயன்படுத்தலாம். இந்த அம்சம் இந்தியாவில் உள்ள சில பயனர்களுக்கு கிடைக்கிறது. இது படிப்படியாக மற்ற பயனர்களுக்கு வழங்கப்படலாம். Meta நிறுவனத்துக்கு சொந்தமான Instagram சேவையானது, 2018ல் IGTV எனப்படும் ஒரு தனித்த நீண்ட வடிவ வீடியோ தளத்தை இயக்கியது. இது பயனர்களுக்கு நீண்ட வீடியோக்களை பதிவேற்ற உதவியது. இருப்பினும் ரீல்ஸ் வீடியோ மீது நிறுவனம் கவனம் செலுத்தியதால் 2022ல் இது நிறுத்தப்பட்டது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Instagram, Instagram Reels, Instagram Audio
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. பட்ஜெட்ல ஒன்னு, பிரீமியம்ல ஒன்னு அசரவைக்கும் Realme P3 Pro செல்போன்
  2. அமர்க்களமான அம்சங்களுடன் விற்பனைக்கு வரப்போகும் Vivo V50 செல்போன்
  3. சக்கைபோடு போடும் Marco படம் OTT தளத்தில் வெளியாகும் தேதி அறிவிப்பு
  4. இதனால Nothing Phone 3a, Nothing Phone 3a Pro விற்பனை என்ன ஆகப்போகுதோ
  5. Samsung's Tri-Fold Phone எத்தனை மடிப்பு தான் மடிக்குறது இந்த செல்போனை?
  6. SwaRail மொபைல் ஆப் இந்த ஒன்று போதும் எல்லாமே கையில் வந்து சேரும்
  7. SwaRail மொபைல் ஆப் இந்த ஒன்று போதும் எல்லாமே கையில் வந்து சேரும்
  8. SwaRail மொபைல் ஆப் இந்த ஒன்று போதும் எல்லாமே கையில் வந்து சேரும்
  9. Microsoft Surface Pro லேப்டாப் தரம் எப்படி? மாஸ் காட்டப்போகும் அப்டேட்
  10. Galaxy S25 மாடலில் இருக்கும் அம்சம்? Samsung செய்யப்போகும் தரமான சம்பவம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »