பில்ட்-இன் காலர் ஐடி, ஸ்பாம் பாதுகாப்பு வசதிகளை பெறும் கூகுள் போன் ஆப்

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 14 ஜூலை 2018 18:49 IST
ஹைலைட்ஸ்
  • பாதுகாப்பற்ற ஸ்பாம் அழைப்புகளை தவிர்க்கும் வசதி அறிமுகம்
  • ஆண்டுராய்டு 6.0 மார்ச்மாலோ போன்களில் உபயோகிக்கலாம்
  • போன் பயன்பாட்டாளரின் விருப்பதிற்கு ஏற்ப இதை ஆப் செய்தும் வைத்து கொள்ளலாம்

 

காலர் ஐடி மற்றும் ஸ்பாம் பாதுகாப்பு வசதிகளை போன் ஆப்-உடன் கூகுள் நிறுவனம் இணைத்துள்ளது.

இதன் மூலம் பாதுகாப்பற்ற ஸ்பாம் அழைப்புகள் வரும் போது, அவற்றை தவிர்க்கலாம். தவிர்க்கப்பட்ட ஸ்பாம் அழைப்புகளின் பட்டியலை கால் ஹிஸ்டரியில் பார்த்து கொள்ளலாம் என்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த புதிய வசதி ஆண்டுராய்டு 6.0 மார்ச்மாலோ போன்களில் உபயோகிக்கலாம். இந்த வசதியை பயன்படுத்த, காலர் ஐடி மற்றும் ஸ்பாம் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். போன் பயன்பாட்டாளரின் விருப்பதிற்கு ஏற்ப இந்த வசதியை ஆப் செய்தும் வைத்து கொள்ளலாம். இந்த பயன்பாட்டை நிறுத்த, போன் ஆப்பில் இருக்கும் மூன்று புள்ளிகளை அழுத்தி, செட்டிங்ஸ் பக்கத்தை திறக்க வேண்டும். செட்டிங்ஸ்> காலர் ஐடி மற்றும் ஸ்பாம் > ஆப்.
 

 

 

ஸ்பாம் அழைப்புகளின் மிஸ்டு கால் நோட்டிபிகேஷன்களை தவிர்க்க பில்டர் சஸ்பெக்டட் ஸ்பாம் கால்ஸ் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். இந்த வசதி மூலம், ஸ்பாம் அழைப்புகளின் மிஸ்டு கால் நோட்டிபிகேஷன்கள் தெரியாது. எனினும், கால் ஹிஸ்டரியில் பில்டர் செய்யப்பட்ட அழைப்புகளின் பட்டியல் இருக்கும்.

Advertisement

அழைப்புகளை ஸ்பாம் என்று குறிப்பிட, போன் ஆப்பில் ரீசெண்ட் ஆப்ஷன் அழுத்தி, குறிப்பிட்ட அழைப்பை தேர்ந்தெடுத்து ப்ளாக் அல்லது ரிப்போர்ட் ஸ்பாம் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google App, Caller ID, Spam Call Block
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.