காலர் ஐடி மற்றும் ஸ்பாம் பாதுகாப்பு வசதிகளை போன் ஆப்-உடன் கூகுள் நிறுவனம் இணைத்துள்ளது.
இதன் மூலம் பாதுகாப்பற்ற ஸ்பாம் அழைப்புகள் வரும் போது, அவற்றை தவிர்க்கலாம். தவிர்க்கப்பட்ட ஸ்பாம் அழைப்புகளின் பட்டியலை கால் ஹிஸ்டரியில் பார்த்து கொள்ளலாம் என்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய வசதி ஆண்டுராய்டு 6.0 மார்ச்மாலோ போன்களில் உபயோகிக்கலாம். இந்த வசதியை பயன்படுத்த, காலர் ஐடி மற்றும் ஸ்பாம் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். போன் பயன்பாட்டாளரின் விருப்பதிற்கு ஏற்ப இந்த வசதியை ஆப் செய்தும் வைத்து கொள்ளலாம். இந்த பயன்பாட்டை நிறுத்த, போன் ஆப்பில் இருக்கும் மூன்று புள்ளிகளை அழுத்தி, செட்டிங்ஸ் பக்கத்தை திறக்க வேண்டும். செட்டிங்ஸ்> காலர் ஐடி மற்றும் ஸ்பாம் > ஆப்.
ஸ்பாம் அழைப்புகளின் மிஸ்டு கால் நோட்டிபிகேஷன்களை தவிர்க்க பில்டர் சஸ்பெக்டட் ஸ்பாம் கால்ஸ் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். இந்த வசதி மூலம், ஸ்பாம் அழைப்புகளின் மிஸ்டு கால் நோட்டிபிகேஷன்கள் தெரியாது. எனினும், கால் ஹிஸ்டரியில் பில்டர் செய்யப்பட்ட அழைப்புகளின் பட்டியல் இருக்கும்.
அழைப்புகளை ஸ்பாம் என்று குறிப்பிட, போன் ஆப்பில் ரீசெண்ட் ஆப்ஷன் அழுத்தி, குறிப்பிட்ட அழைப்பை தேர்ந்தெடுத்து ப்ளாக் அல்லது ரிப்போர்ட் ஸ்பாம் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்