லைவ் டிரான்ஸ்கிரைப் மற்றும் சவுண்டு ஆம்பிலிஃவையர் என்னும் இரண்டு பதிய கூகுள் உதவும் செயலிகள் அறிமுகம்.
காதுகேளாதவர்களுக்கான பல தொழில்நுட்பங்கள் மார்கெட்டில் இல்லை என்ற நிதர்சன உண்மையை மாற்றும் வகையில் கூகுள் நிறுவனம் இரண்டு புதிய உதவும் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உதவும் செயலி மூலம் காதுகள் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் ஸ்மார்ட்போன்களை வைத்து தங்களது கருத்துகளை கூறும் வசதியை உறுவாக்கியுள்ளது.
இந்த புதிய செயலிகளின் அறிமுகத்தால் கேட்கும் திறனை அதிகரிக்கும் உபகரணங்களின் பயன்பாட்டை குறைக்க முடிகிறது. லைவ் டிரான்ஸ்கிரைப் (Live Transcribe) மற்றும் சவுண்டு ஆம்பிலிஃவையர் (Sound Amplifier) என அழைக்கப்படும் இந்த இரண்டு புதிய உதவும் செயலிகள் அண்ட்ராய்டு போன்களில் வெளியாகியுள்ளது.
லைவ் டிரான்ஸ்கிரைப் என்னும் செயலியை பொருத்தவரை காதுகேளாதவர்களுக்கு செய்திகளை டிரான்ஸ்கிரிப்ஷன் முறையில் அளிக்கும். அதேசமயத்தில் சவுண்டு ஆம்பிலிஃவையர் என்னும் செயலி மூலம் சிறிதளவு காதுகேளாத நபர்களுக்கு சப்தத்தை அதிகரிக்கவும் கேட்கும் சப்தத்தை தெளிவுபடுத்த உதவுகிறது.
கூகுள் பிளே ஸ்டோரில் வெளியாகியிருக்கும் இந்த புதிய செயலியை நம்மால் பதிவிறக்கம் செய்துகொண்டு பயன்படுத்த முடியும். ஆனால் லைவ் டிரான்ஸ்கிரைப் செயலி இன்னும் கட்டமைப்பில் உள்ளதால் பதிவிறக்கம் செய்து சோதனை செய்ய உதவும் நபர்களால் மட்டுமே இந்த செயலியின் முழு பயனை அனுபவிக்க முடிகிறது.
இதன் இயக்கத்தை குறித்து கேட்டபோது இந்த செயலி முன்னணி ஸ்பிச் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பேச்சை எழுத்து வடிவாக மாற்ற உதவுகிறது. சுமார் 70 பிரதான மொழிகள் மற்றும் வட்டார மொழிகளில் பயன்படுத்த முடிகிறது. அப்படி மாற்றபடும் வாக்கியங்கள் மற்றும் பேச்சுக்கள் கூகுள் நிறுவனம் சேமிக்காமல் நமது ஸ்மார்ட்போன்களில் சேமித்துவைக்க உதவும்.
மேலும் இரண்டு மொழிகள் கலந்து பேசினாலும் அதை பயனாளிகளுக்கு உணர்த்த இந்த செயலி உதவுகிறது. ‘லைவ் டிரான்ஸ்கிரைப்' செயலி கூகுள் பிக்சல் 3 (ரூ.62,540) பொருத்தப்பட்டே வெளியாகிறது. மேலும் இரண்டாவது செயலியான சவுண்டு ஆம்பிலிஃவையர் சப்தத்தை கேட்காதவர்களுக்கு மிகைப்படுத்தி கேட்கும் திரணை அதிகரிக்கும்.
சுமார் 3.1 எம்.பி அளவு கொண்டுள்ள இந்த செயலி பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடிகிறது. அதை ஆக்டிவேட் செய்ய செட்டிங்ஸ் > அக்சஸ்பிளிட்டி > சவுண்ட ஆம்பிலிஃவையர் > சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Poco M8 5G Launching Today: Know Price in India, Features, Specifications and More
Oppo Reno 15 Series 5G Launching Today: Know Price in India, Features, Specifications and More