கூகுள் அசிஸ்டண்ட் இனி கூகுள் நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பான டுயோ மூலம் வீடியோ கால்கள் செய்துகொள்ள முடியும். இந்த அம்சம், இனி பயனர்களுக்குத் தங்களுடைய போனில் மொபைல் வீடியோ சாட் செயலியின் மூலம் வீடியோ கால்கள் செய்துகொள்ள உதவும்.
”நீங்கள் கூகுள் அசிஸ்டண்ட் செயலி பயன்படுத்தினால் கூகுள் அசிஸ்டண்டில் குரலால் கட்டளையிட்டோ (voice command) அல்லது வீடியோ கால் (பெயர்) எனத் தட்டச்சு செய்தோ டுயோ வீடியோ கால் செய்ய முடியும் என கூகுள் ஒரு பதிவில் தெரிவித்திருக்கிறது.
இந்த அப்டேட் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-ஓஎஸ் டுயோவின் சமீபத்திய வெர்ஷனில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி இன்ஸ்டால் செய்யாத பயனர்களுக்கு, வீடியோ அழைப்புகள் கூகுளின் மற்றுமொரு மெசேஜ் மற்றும் வீடியோ சாட் தளமான ஹாங்அவுட்சிற்கு மாற்றப்படும். இந்த அம்சங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், அனைத்துப் பயனர்களுக்கும் கிடைப்பதற்கு சிறிது காலம் பிடிக்கும்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஆண்ட்ராய்ட் கூகுள் டுயோ பல- சாதன சப்போர்ட் பெற்று, டேப்லட்டுகளுக்கு என்று புதிய அம்சம் ஒன்றைச் சேர்த்துள்ளது. செர்வர் சைட் அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டு ஆரம்பத்தில் ஒருசில பயனர்களுக்கு மட்டும் இந்த அனுபவங்கள் கிடைத்தாலும், விரைவில் பெருவாரியான பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெவ்வெறு சாதனங்கள் பயன்படுத்துபவர்களுக்கு தங்களுடைய தொடர்புகளுடன் இணைப்பில் இருக்க பல-சாதனங்களில் சப்போர்ட் செய்யும் வசதி தேவைப்படுகிறது.
நாம் குறிப்பிட்டுள்ளதைப் போல, ஆண்ட்ராய்ட் டுயோ செயலி டேப்லட்டுகளுக்கு எனப் புதிய அம்சங்களைப் பெற்றுள்ளது. இந்த புதிய அம்சம் வீடியோ விண்டோவை திரை முழுமைக்கும் காண்பிக்கிறது - இதன் வலது புறத்தில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் டேப்கள், ஒருங்கிணைந்த தொடர்புகளைத் தேடும் டேபும் அமைந்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்