கூகுள் நிறுவனம் தனது கால் சென்டர்களில் விரைவில் ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் தொழிற்நுட்பத்தை பான்படுத்த உள்ளது. இதற்காக சிஸ்கோ, ஜினீசஸ் ஆகிய நிறுவனங்களின் உதவியை கூகுள் நாடியுள்ளது.
’காண்டாக்ட் செண்டர் ஏ.ஐ’ என்கிற மென்பொருள் அழைப்பாளர்கள் கால் செண்டரை அழைக்கும்போது, தன்னிச்சையாக அந்த அழைப்பை ஏற்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களின் பிரச்னையை தானே சரி செய்யும் வகையில் இந்த தொழிற்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த்தாக அந்த அழைப்பு கால் சென்டர் பிரதிநிதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஃபெய்-ஃபெய்-லீ என்கிற கூகுள் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தொழிற்நுட்பம் வாடிக்கையாளர்களின் பிரச்னைகளை உடனடியாக தீர்த்து வைப்பதற்காக, உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆராய்ச்சி சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது.
இது உருவாக்கப்பட்டால், விவசாயம், ஹெல்த் கேர், கல்வி போன்ற துறைகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்