நீங்கள் Flipkart Plus உறுப்பினர் என்றால் ஆகஸ்ட் 24 அன்றே ஒருநாள் முன்பாக சிறப்பு முன் அனுமதி உண்டு
Flipkart Plus உறுப்பினர்களுக்கு ஆகஸ்ட் 24 இரவு 9மணி முதலே சிறப்பு முன் அனுமதி
ஃப்ளிப்கார்ட் சூப்பர் சேல் என்னும் ஒரு நாள் சிறப்புச் சலுகை விற்பனையினை அறிவித்துள்ளது ஃப்ளிப்கார்ட் தளம். இதன்படி ஆகஸ்ட் 25 அன்று இச்சிறப்பு விற்பனை Flipkart.com தளத்தில் நடைபெறும். நீங்கள் Flipkart Plus உறுப்பினர் என்றால் ஆகஸ்ட் 24 அன்றே ஒருநாள் முன்பாக சிறப்பு முன் அனுமதி உண்டு. குறிப்பிட்ட சில பொருட்களை மாதாந்திரத் தவணையில் வாங்கினாலும் 10% உடனடி கழிவு வழங்க எச்டிஎப்சி வங்கியுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஆடியோ சாதனங்கள், கேமரா மற்றும் பல பொருட்கள் இச்சலுகை விற்பனையில் கிடைக்கும்.
ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 9மணிக்கே ஒரு இரவு முன்னதாக சிறப்பு அனுமதி உண்டு. என்னென்ன சலுகைகள் என்று இன்னும் அறிவிக்காவிட்டாலும் ஸ்மார்ட்போன்கள் கட்டாயம் நல்ல தள்ளுபடியுடன் கிடைக்கும். குறிப்பாக ரெட்மி 5ஏ ஆகஸ்ட் 25 அன்று நண்பகல் 12 மணிக்கு ஃப்ளாஷ் சேலில் கிடைக்கும். தொலைக்காட்சிகள், பிற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும். மடிக்கணினிகள், ஸ்பீக்கர்கள், இயர்போன்கள், கேமரா போன்ற பொருட்களுக்கு 80% வரை கழிவு உண்டு. JBL, Canon, HP போன்ற பல முன்னணி நிறுவனங்களின் டீல்கள் உள்ளன.
டிவி பெட்டிகளின் ஃப்ளாஷ் சேல்களில் 55” Mi TV 44,999 ரூபாய்க்கும், 55” iFFALCON 4K ஆண்டிராய்டு ஸ்மார்ட் டிவி 45,999 ரூபாய்க்கும் ஆகஸ்ட் 25ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குக் கிடைக்கும்.
மேலும் நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரை ரஷ் ஹவர் டீல்களும், எட்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட கேட்ஜட்டுகளுக்கான டீல்களும், ஒவ்வொரு மணி நேரமும் பல பொருட்களுக்கான எபிக் 24 டீல்களும் இச்சலுகை விற்பனையில் இடம்பெறும்.
மின்னணு சாதனங்கள் மட்டுமின்றி நாற்காலி, கட்டில், சோஃபா உள்ளிட்ட அறைகலன்களும், சமையல் சாதனங்களும் 40 – 80% கழிவில் கிடைக்கும். அழகுபொருட்கள், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள் ஆகிய பிரிவுகளில் 99ரூபாய் முதல் பொருட்கள் வாங்கக் கிடைக்கும். நைக்கி, லீ, ஃபாரெவர் 21 போன்ற முன்னணி நிறுவனங்களின் ஆடைகள், காலணிகள் போன்றவை 30 – 80% டிஸ்கவுண்டில் கிடைக்கும்.
இச்சலுகை விற்பனையினை இலாபகரமாக மற்றிக்கொள்ள, முன்பே ஃப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்து, வீட்டு முகவரி, பேமெண்ட் தகவல்களை முன்கூட்டியே பதிந்து வைக்கவேண்டும். NDTV Gadgets பிரிவில் விற்பனை நாள் அன்று உடனுக்குடன் சிறந்த டீல்கள் பற்றி அறிவிக்கப்படும். எங்களோடு இணைந்திருங்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்