ஸ்மார்ட் போன்களுக்கு வரும் அடுத்த செட் எமோஜிகள்... பல சுவராஸ்ய அறிமுகங்கள்!

ஸ்மார்ட் போன்களுக்கு வரும் அடுத்த செட் எமோஜிகள்... பல சுவராஸ்ய அறிமுகங்கள்!

எமோஜி 13.1 பேக்கின் சில வடிவங்கள் வெளியாகியுள்ளன

ஹைலைட்ஸ்
  • எமோஜி 13.1 அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைமுறைக்கு வரும்
  • கொரோனா வைரஸ் பாதிப்பால் எமோஜி 14 பணிகள் முடங்கின
  • எமோஜி 13.1 சில படங்கள் தற்போது வெளிவந்துள்ளன
விளம்பரம்

எமமோஜி 14 காலதாமதமான நிலையில், எமாஜி 13.1 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டில் என்னென்ன எமோஜிகள் சேர்க்கப்பட்டுள்ன என்பதைப் பார்க்கலாம்.

ஒழுங்குறி கூட்டமைப்பு (Unicode Consortium) எனப்படும் யுனிகோடு மேம்பாட்டு நிறுவனம்தான் எமோஜிகளையும், பிற யுனிகோடுகளையும் அறிவித்து வருகிறது. இந்த கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சில புதிய எமோஜிகளை அறிவிக்கும். அது அப்படியே ஸ்மார்ட்போன்களிலும், கணினிகளிலும் உட்புகுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்.  தற்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள் போன்ற ஆப்களில் நாம் பயன்படுத்தும் எமோஜிகள், ஸ்மைலிகள் அனைத்தும் ஒழுங்குறி கூட்டமைப்பு வெளியிட்டதாகும். 

கடந்த ஜனவரி மாதம் எமோஜி 13 அறிவிக்கப்பட்டு, மார்ச் மாதம் வெளிவந்தது. அதன்பிறகு எமோஜி 14 உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்தாண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக எமோஜி 14 உருவாக்குவதிலும், அறிமுகம் செய்வதிலும் காலதாமதமானது. எனவே எமோஜி 14 அடுத்த ஆண்டு அறிமுகமாகவும் என்று செய்திகள் வந்தன.

இந்த நிலையில், தற்போது யுனிகோட் எமோஜி 13.1 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் மாதம் வெளியாகிறது. அதன்பிறகு ஸ்மார்ட்போன்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த எமோஜிகளைப் பெற்று, அடுத்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு நடைமுறைக்கு கொண்டு வரும் எனத் தகவல்கள் வந்துள்ளன.

எமோஜி 13.1 இல் சில வடிவங்கள், ஸ்மைலிகள் மட்டும் கசிந்துள்ளன. மேகக்கூட்டத்தில் முகம், இறுக்கப்பட்ட இதயம், தாடி வைத்த லேடி, மெய் மறந்து பார்க்கும் பார்வை, ஓரின ஈர்ப்பு போன்ற எமோஜிகள் ஆன்லைனில் கசிந்துள்ளன.

முன்னதாக எமோஜி 14 பேக்கானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த உருவாக்கப்பணிகள் சுமார் 6 மாதங்கள் காலதாமதமாகியுள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டு தான் எமோஜி 14 நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Poco M2 Pro: Did we really need a Redmi Note 9 Pro clone? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Unicode Consortium, Emoji 13, Emoji 13 1, Emoji 14, Coronavirus
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »