ஒரு வழியாக Apple குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது!

Apple நிறுவனம் தனது ஸ்ட்ரீமிங் சேவையான Apple TV+ல் இருந்து plus குறியீட்டை (sign) நீக்கியது

ஒரு வழியாக Apple குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது!

Photo Credit: Reuters

ஆப்பிள் டிவி டிசம்பரில் F1 தி மூவியை ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கும்

ஹைலைட்ஸ்
  • Apple TV+ ஸ்ட்ரீமிங் சேவையின் பெயரை Apple TV என மாற்றியுள்ளது
  • F1 The Movie திரைப்படத்தின் உலகளாவிய ஸ்ட்ரீமிங் அறிவித்த போது இந்த பெயர்
  • குழப்பத்தைத் தீர்க்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது
விளம்பரம்

உலக டெக் மற்றும் பொழுதுபோக்குச் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் Apple, தற்போது தனது ஸ்ட்ரீமிங் சேவையின் பிராண்டிங்கில் (Branding) ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. சந்தா செலுத்திப் பார்க்கும் அதன் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான Apple TV+ ஆனது, இனி வெறும் Apple TV என்ற பெயரில் இயங்கும் என்று அறிவித்துள்ளது. இந்த பெயர் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை Apple நிறுவனம் நேரடியாக வெளியிடாமல், மிகவும் சாதாரணமாக, தனது வரவிருக்கும் Apple Original Film பற்றிய பிரஸ் ரிலீஸின் இறுதியில் ஒரு வரியில் குறிப்பிட்டுள்ளது. ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் (Brad Pitt) நடித்துள்ள, ஃபார்முலா 1 (Formula 1) ரேசிங்கை மையமாகக் கொண்ட 'F1 The Movie' திரைப்படத்தின் உலகளாவிய ஸ்ட்ரீமிங் அறிமுகத் தேதியை (Global Streaming Debut) டிசம்பர் 12 அன்று அறிவித்த போது, "Apple TV+ is now simply Apple TV, with a vibrant new identity,” என்று அந்த ஒரு வரியை சேர்த்திருந்தது.

குழப்பத்தைத் தவிர்க்கவே இந்த Rebrand:

சந்தாதாரர்களைக் கவர, Apple நிறுவனம் தனது ஸ்ட்ரீமிங் சேவையை 2019 ஆம் ஆண்டு Apple TV+ என்ற பெயரில் தொடங்கியது. ஆனால், இந்த பெயரானது ஆரம்பத்திலிருந்தே வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது.
ஏனெனில், Apple நிறுவனத்தின் தயாரிப்புகளில்,

  1. Apple TV என்றே அதன் செட்-டாப் பாக்ஸ் (set-top box) ஹார்டுவேர் சாதனம் அழைக்கப்படுகிறது.
  2. Apple TV App என்றே அதன் ஸ்ட்ரீமிங் அப்ளிகேஷனும் அழைக்கப்படுகிறது.
  3. Apple TV+ என்றே அதன் சந்தா அடிப்படையிலான சேவையும் அழைக்கப்பட்டது.

சாதனம், ஆப், மற்றும் சேவை ஆகிய மூன்றுக்கும் ஒரே மாதிரியான பெயர்கள் இருந்ததால், "Apple TV-யில் Apple TV App-ஐப் பயன்படுத்தி Apple TV+ பார்க்கிறேன்" என்று சொல்வதே ஒரு பெரிய குழப்பமான விஷயமாக இருந்தது. இந்தக் குழப்பத்தைக் குறைக்கவே, Apple நிறுவனம் இப்போது Apple TV+-ல் இருந்து '+' குறியீட்டை நீக்கி, அதை Apple TV என எளிமைப்படுத்தியுள்ளது.

'F1 The Movie'-க்கு மிகப்பெரிய வெற்றி:

நடிகர் பிராட் பிட், டேம்சன் இட்ரிஸ் (Damson Idris) ஆகியோர் நடித்துள்ள, ஜோசப் கோசின்ஸ்கி (Joseph Kosinski) இயக்கியுள்ள F1 The Movie திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளவில் $629 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்து, இது சாதனை படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இந்தப் படம், இப்போது டிசம்பர் 12, 2025 அன்று Apple TV தளத்தில் (சந்தாதாரர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி) ஸ்ட்ரீமிங் ஆகிறது என்ற அறிவிப்பு, வாடிக்கையாளர்களுக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்த பெயர் மாற்றம், வெறும் பிராண்டிங் மாற்றம் மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் Apple தனது ஸ்ட்ரீமிங் தளத்தில், விளம்பரங்கள் (Ad-supported Tier) கொண்ட ஒரு மலிவான சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பையும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது. மற்ற முன்னணி ஸ்ட்ரீமிங் சேவைகள் அனைத்தும் விளம்பர ஆதரவு திட்டங்களைக் கொண்டுள்ள நிலையில், Apple TV-ல் மட்டும் அது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »