வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சேவைகளை அளித்து வரும் அமேசான் நிறுவனம், தற்போது பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ‘ப்ரைம் ரீடிங்’ வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் இந்த இ-புத்தகங்களை இலவசமாக படிக்கலாம். பிரபலமான இலக்கியம், புனைகதை, காமிக்ஸ் புத்தகங்கள், ஆகியவை அமேசான் ப்ரைம் ரீடிங்கில் இடம் பெற்றுள்ளன.
அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் கிண்டில் இ-புத்தகம் மூலமாகவும், அல்லது கிண்டில் ஆப் மூலம் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம் என்று அமேசான் கிண்டில் இந்தியா தலைவர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தகங்கள் மட்டுமின்றி, இந்தி, மராத்தி, தமிழ் ஆகிய இந்திய மொழிகளிலும் பல புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ஹைலைட்ஸ், டிக்ஷ்னரி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் வெளியான அமேசான் ப்ரைம் ரீடிங், இந்தியாவிற்கு வர இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்