3 Subwoofers உடன் வெளியானது ஜியோமியின் XiaoAI Touchscreen Speaker Pro 8! 

Xiaomi XiaoAI Touchscreen Speaker Pro 8 ஆனது CNY 499 (சுமார் ரூ. 5,100) விலைக் குறியைக் கொண்டுள்ளது.

3 Subwoofers உடன் வெளியானது ஜியோமியின் XiaoAI Touchscreen Speaker Pro 8! 

Xiaomi XiaoAI Touchscreen Speaker Pro 8, Google Nest Hub போன்ற வடிவமைப்பில் வருகிறது

ஹைலைட்ஸ்
  • XiaoAI Touchscreen Speaker Pro 8 டிசம்பர் 18 முதல் விற்பனைக்கு வரும்
  • இந்த சாதனம் DTS audio tuning உடன் வருகிறது
  • 50.8mm, 10W driver-ஐ ஜியோமி வழங்கியுள்ளது
விளம்பரம்

Google Nest Hub மற்றும் Amazon Echo Show 8 போன்றவற்றைப் பெற ஜியோமி தனது புதிய ஸ்மார்ட் ஹோம் சாதனமான XiaoAI Touchscreen Speaker Pro 8-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 8-inch டிஸ்பிளே கொண்ட, XiaoAI Touchscreen Speaker Pro 8 நிகழ்நேர வானிலை அப்டேட், மல்டிமீடியா ஸ்ட்ரீமிங் மற்றும் வீடியோ அழைப்பு அம்சங்களை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிஸ்ப்ளே மற்ற ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை கட்டுப்படுத்தும் திறனை வழங்குகிறது.  Android மற்றும் iOS சாதனங்களுடன் பொருந்தக்கூடிய தன்மையையும் Xiaomi வழங்கியுள்ளது.


Xiaomi XiaoAI Touchscreen Speaker Pro 8-ன் விலை:

Xiaomi XiaoAI Touchscreen Speaker Pro 8 ஆனது CNY 499 (சுமார் ரூ. 5,100) விலைக் குறியைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் Xiaomi YouPin-ல் பட்டியலிடப்பட்டுள்ளது, இருப்பினும் இது டிசம்பர் 18 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். மேலும், இது Mi.com மற்றும் JD.com போன்ற ஆன்லைன் போர்ட்டல்கள் மூலம் வாங்குவதற்கு கிடைக்கும்.

XiaoAI Touchscreen Speaker Pro 8-ன் உலகளாவிய விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Xiaomi XiaoAI Touchscreen Speaker Pro 8-ன் சிறப்பம்சங்கள்:

Xiaomi XiaoAI Touchscreen Speaker Pro 8-ல் 1280x800 pixels resolution உடன் 8-inch multi-touch டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதில், far-field voice-recognition தொழில்நுட்பம் உள்ளது. மேலும், இந்த டிஸ்பிளே, மூன்று subwoofers உடன் இணைக்கப்பட்டு, 50.8mm 10W driver-ஐக் கொண்டுள்ளது.

XiaoAI Touchscreen Speaker Pro 8-ன் இணைப்பு விருப்பங்களில் dual-band Wi-Fi 802.11ac மற்றும் Bluetooth v5.0 ஆகியவை அடங்கும். இது குறைந்தது Android 4.4 அல்லது iOS 9.0 இயங்கும் சாதனங்களுடன் இணக்கமானது. மேலும், volume-ஐ சரிசெய்ய physical keys உள்ளன.

Amazon Echo Show 8 அல்லது Google Nest Hub-ஐ போலவே, XiaoAI Touchscreen Speaker Pro 8, Douyin, iQiyi மற்றும் Youku போன்ற ஓவர்-தி-டாப் (over-the-top - OTT) இயங்குதளங்களுடன் செயல்படுகிறது. இது குழந்தைகளை மையமாகக் கொண்ட உள்ளடக்கம் மற்றும் நினைவூட்டல்கள் மற்றும் அலாரங்களை அமைக்கும் திறனை வழங்குகிறது. பயனர்கள் முன் கேமராவைப் பயன்படுத்தி வீடியோ அழைப்புகளை செய்யலாம் அல்லது சாதனத்தை டிஜிட்டல் புகைப்பட சட்டமாகப் பயன்படுத்தலாம்.

குரல் கட்டளைகளைப் பயன்படுத்தி பணிகளைச் செய்ய XiaoAI digital assistant இருக்கிறது. மேலும், பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை கட்டுப்படுத்த ஒரு மையமாக இந்த சாதனம் செயல்பட முடியும்.

  • KEY SPECS
Model XiaoAI Touchscreen Speaker Pro 8
Color White
Display included Yes
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  2. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  3. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  4. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
  5. அறிமுகமானது Redmi Pad 2: Google AI அம்சங்களுடன் வந்த இந்தியாவின் முதல் டேப்லெட் - மிஸ் பண்ணாதீங்க
  6. அறிமுகமானது iQOO Z10 Lite 5G: பட்ஜெட் 5G-யின் புதிய ராஜா! சிறப்பம்சங்கள் வெளியானது
  7. கேலக்ஸி S25 அல்ட்ரா சலுகை: ₹75,000 வரை தள்ளுபடி! Samsung ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத ஆஃபர்
  8. அறிமுகமாகிறது Vivo X200 FE: Zeiss கேமராவுடன் அசத்தல் டிசைன்! இந்த கலர்ல வாங்க ஆசையா இருக்கா
  9. அறிமுகமாகிறது Vivo T4 Lite 5G: "மேட் இன் இந்தியா" சிறப்பு - இந்த மாதம் வெளியீடு உறுதி! மிஸ் பண்ணாதீங்க!
  10. அவசரம்! WhatsApp வணிகங்களுக்குப் புதிய அம்சங்கள்: பணமாக்கும் வழி, பிரமோஷன் வாய்ப்புகள் - முழு விபரம் இதோ!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »