அமேசான் ஃபயர் ஸ்டிக்கை விட எம்ஐ டிவி ஸ்டிக் விலை குறைவாக இருக்கலாம்.
எம்ஐ டிவி ஸ்டிக் ஐரோப்பாவில் இம்மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது
இந்தியாவில் எம்ஐ டிவி ஸ்டிக் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக ஷாவ்மி அறிவித்துள்ளது.
ஷாவ்மி தரப்பில் எம்ஐ டிவி ஸ்டிக் இம்மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இதன் விலை 39.99 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 3,500 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இந்தியாவிலும் எம்ஐ டிவி ஸ்டிக் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக எம்ஐ.,யின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி எம்ஐ டிவி ஸ்டிக் அறிமுகமாகிறது. இது அமேசானின் ஃபயர் ஸ்டிக்கிற்குப் போட்டியாக, அதே அம்சங்களுடன் வருகிறது.
முன்னதாக கடந்த மே மாதம் எம்ஐ பாக்ஸ் 4K வந்தது. அதன் மினியேச்சர் வடிவமே எம்ஐ டிவி ஸ்டிக் ஆகும். எம்ஐ பாக்ஸில் உள்ளதே போன்றே ரிமோட் வழங்கப்படுகிறது. ஆனால், டிவி ஸ்டிக் குவாலிட்டி 4K கிடையாது. மாறாக ஃபுல் ஹெச்டி (1920x1080 பிக்சல்) குவாலிட்டியில் எம்ஐ டிவி ஸ்டிக் வருகிறது.
வாய்ஸ் அசிஸ்டெண்ட் அம்சமும் இந்த ரிமோட்டில் உள்ளது. இதன் மூலம் நமக்குத் தேவையான ஆப்ஸ், திரைப்படங்கள் போன்றவற்றை சொன்னாலே போதும், திரையில் தோன்றி விடும். நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார் போன்ற ஒடிபி தளங்களும் உள்ளது. இந்தியாவில் இதன் விலை 4 ஆயிரத்துக்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான விவரங்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி, எம்ஐ டிவி ஸ்டிக் அறிமுகமாகும் போது தெரியவரும்.
Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999