சென்சிடிவ் கண்ட்ரோல் வழியாக இந்த இயர்போனில் பிளேபேக்கைக் கட்டுப்படுத்தலாம். கூகுள் அசிஸ்டெண்ட், அலெக்சா மற்றும் சிரி ஆதரவு உள்ளது.
இந்தியாவில் ஷாவ்மி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஷாவ்மி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 என்ற இயர்பட்ஸை அறிமுகம் செய்தது. அப்போது இதன் விலை 4,499 என்று நிர்ணயித்தது. அதேசமயம் நிறுவனத்தின் ஸ்ட்ரீமிங் பாக்ஸ் ஷாவ்மி எம்ஐ பாக்ஸ் 4 கே மற்றும் புதிய எம்ஐ 10 ஸ்மார்ட்போன் ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
இதனையடுத்து ஒன்பிளஸ், விவோ உள்ளிட்ட நிறுவனங்கள் TWS எனப்படும் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்களை அண்மையில் அறிமுகம் செய்தது. இதனால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க ஷாவ்மி நிறுவனம் தனது வயர்லெஸ் இயர்பட்ஸின் விலையை குறைக்க முடிவு செய்தது. அதன்படி, தற்போது எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 இன் விலை 500 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ. 4,499 இலிருந்து ரூ.3,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் ஷாவ்மியின் இந்த இயர்பட்ஸை, mi.com மற்றும் அமேசான் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளலாம். முன்னதாக ஒன்பிளஸ் பட்ஸ் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்விலை 4,990 ரூபாய் என்று நிர்ணியக்கப்பட்டது. ஆனால், இது ஆகஸ்ட் மாதம் தான் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாவ்மி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 சிறப்பம்சங்கள்:
ஷாவ்மியின் புதிய வயர்லெஸ் இயர்போன் ஆப்பிள் ஏர்போட்களைப் போலவே இருக்கின்றன. 14.2 மிமீ டைனமிக் டிரைவர் கொண்டது. இந்த சாதனம் புளூடூத் 5.0 உடன் எஸ்.பி.சி, ஏஏசி மற்றும் எல்எச்.டி.சி புளூடூத் கோடெக்குகளை ஆதரிக்கிறது. இயர்போனில் 30 mAh பேட்டரி உள்ளது. இந்த சார்ஜிங் கேசில் 250 mAh பேட்டரி உள்ளது. டச் சென்சிடிவ் கண்ட்ரோல் வழியாக இந்த இயர்போனில் பிளேபேக்கைக் கட்டுப்படுத்தலாம். கூகுள் அசிஸ்டெண்ட், அலெக்சா மற்றும் சிரி ஆதரவு உள்ளது.
Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features