Vivo-வின் முதல் ஸ்மார்ட்போனான புதிய யு-சீரிஸில் - Vivo U10 விற்பனைக்கு வந்துள்ளது.
Electric Blue மற்றும் Thunder Black வண்ணங்களில் வருகிறது Vivo U10
Vivo-வின் முதல் ஸ்மார்ட்போனான புதிய யு-சீரிஸில் - Vivo U10 விற்பனைக்கு வந்துள்ளது. தொலைபேசி இப்போது அமேசான் மற்றும் விவோ இ-ஸ்டோர் வழியாக வாங்குவதற்கு தயாராக உள்ளது. Vivo U10 இந்த வார தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் 8-megapixel front snapper போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிப்பதோடு, 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் Vivo U10-ன் விலை மற்றும் அறிமுகச் சலுகைகள்
Vivo U10, 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜின் அடிப்படை விலை ரூ. 8,990-யாகவும், 3 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ. 9.990-யாக உள்ளது. Vivo U10 டாப்-எண்ட் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ. 10.990 ஆகும். இந்த போன் Electric Blue மற்றும் Thunder Black கலரிலும், gradient finish உடனும் வெளிவருகிறது. குறிப்பிட்டுள்ளபடி, தொலைபேசி இப்போது அமேசான் மற்றும் விவோ இ-ஸ்டோர் வழியாக விற்பனைக்கு கிடைக்கிறது.
அறிமுகச் சலுகைகளைப் பற்றி பேசுகையில், எஸ்பிஐ வங்கி அட்டை வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி உள்ளது. ஆறு மாதங்கள் வரை விலை இல்லாத ஈ.எம்.ஐ மற்றும் ஜியோ சந்தாதாரர்களுக்கு ரூ. 6,000 ரூபாயும் கிடைக்கப்பெறும். அமேசான் பே கணக்குடன் வாங்குபவர்களுக்கும் ரூ. 1,000 திருப்பக்கிடைக்கிறது.
Vivo U10-ன் விவரக்குறிப்புகள்
Android 9 Pie உடன் Funtouch OS 9.1-யும் சேர்ந்து Vivo U10 இயங்குகிறது. 6.35-inch HD+ (720x1544 pixels) display மற்றும் 19.5:9 aspect ratio-வுடன் இயங்குகிறது. Qualcomm Snapdragon 665-ல் இயங்குவதோடு, 4 ஜிபி ரேம் வரை இதில் இணைக்கப்பட்டுள்ளது.
விவோ தொலைபேசி மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 13 மெகாபிக்சல் முதன்மை கேமராவை f/2.2 லென்ஸுடனும், 8 மெகாபிக்சல் செகண்டரி கேமராவின் 120 டிகிரி பார்வையை கொண்டுள்ளது. 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் f/2.4 லென்ஸஸுடன் உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா f/1.8 லென்ஸுடன் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளைக் கையாளவும் ஏதுவாக இருக்கிறது.
தொலைபேசியில், 4 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio மற்றும் Micro-USB port ஆகியவை அடங்கும். Vivo U10-ல் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light, fingerprint reader, magnetometer, and a proximity sensor உள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999