4 கே டிஸ்ப்ளேவுடன் ரெட்மியின் மூன்று புதிய ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்!

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் மாடல்கள் ஜூன் 10 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும்.

4 கே டிஸ்ப்ளேவுடன் ரெட்மியின் மூன்று புதிய ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்!

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் மெட்டல் ஃபிரேமுடன் வருகிறது மற்றும் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தில் 97 சதவீதத்தை வழங்குகிறது

ஹைலைட்ஸ்
  • ரெட்மி மூன்று புதிய டிவிக்களை கொண்டு வந்துள்ளது
  • இதில் 4 கே டிஸ்ப்ளே உள்ளது
  • இவை சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
விளம்பரம்

Xiaomi மூன்று புதிய தயாரிப்புகளை கொண்டு வந்துள்ளது. செவ்வாயன்று சீனாவில் ஒரே நேரத்தில் மூன்று புதிய ஸ்மார்ட் டிவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த தயாரிப்புகள் ரெட்மி பிராண்டின் கீழ் சந்தைக்கு வந்துள்ளன. ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 50, ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 55 மற்றும் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 65 ஆகியவை 4 கே டிஸ்ப் மற்றும் டால்பி ஆடியோவைக் கொண்டுள்ளன.


டிவிகளின் விலைகள்:

Redmi Smart TV X50 விலையை ஷாவ்மி அறிவிக்கவில்லை. இந்த பட்ஜெட் ஸ்மார்ட் டிவி சிஎன்ஒய் 1,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,200)-க்கும் குறைவான விலையில் சந்தைக்கு வரும். 

Redmi Smart TV X55 விலை சிஎன்ஒய் 2,299 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.24,400). 

Redmi Smart TV X65 விலை சிஎன்ஒய் 3,299 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.35,500). சீனாவில் டிவிகளுக்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.


டிவிகளின் விவரங்கள்:

இந்த மூன்று டிவிகளிலும் உலோக பிரேம்கள் உள்ளன. உடல் விகிதத்தில் 97 சதவீத திரை உள்ளது. வாய்ஸ் கமெண்ட் ரிமோட் கண்ட்ரோலில் உள்ளது.

மூன்று டிவிகளிலும் 12.5W ஸ்பீக்கர்கள் உள்ளன. டிவியின் உள்ளே இரண்டு கோர்டெக்ஸ்-ஏ 73 கோர்களும் இரண்டு கார்டெக்ஸ்-ஏ 73 கோர் சிபியுக்களும் உள்ளன. மாலி-ஜி 51 ஜி.பீ.யூ மற்றும் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது.

இணைப்பிற்கு வைஃபை, புளூடூத் 5.0, மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் ஒரு ஈதர்நெட் போர்ட் உள்ளன.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 50, 50 இன்ச் டிஸ்ப்ளே, ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 55, 55 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 65, 65 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.


Mi TV 4X vs Vu Cinema TV: Which is the best budget TV in India right now? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ces_story_below_text

#சமீபத்திய செய்திகள்
  1. வீடே அதிரும் அளவுக்கு சவுண்ட்! அமேசான் சேலில் JBL Charge 6 மற்றும் Marshall Middleton அதிரடி விலையில்! டாப் டீல்கள் இதோ
  2. சினிமாட்டிக் சவுண்ட் இப்போ பட்ஜெட் விலையில! அமேசான் சேலில் Rs. 4,499 முதல் அதிரடி சவுண்ட்பார் டீல்கள்
  3. பழைய லேப்டாப்பை மாத்த இதுதான் சரியான நேரம்! அமேசான் சேலில் HP Omnibook 5 மற்றும் Lenovo Yoga Slim 7 அதிரடி விலையில்
  4. துணிஞ்சு நனைக்கலாம்.. எவ்வளவு வேணா பேசலாம்! 7000mAh பேட்டரி மற்றும் IP69 ரேட்டிங்குடன் மிரட்டலாக வந்த OPPO A6 5G
  5. பழைய நினைவுகளைப் புதுப்பிக்க ஒரு 'சினிமா' டச்! ஃபுஜிஃபிலிம் இன்ஸ்டாக்ஸ் மினி ஈவோ சினிமா லான்ச்! செம ஸ்டைலிஷ் லுக்
  6. பேக்கிங், கிரில்லிங், ரீ-ஹீட்டிங் - எல்லாம் ஒரே மெஷின்ல! அமேசான் சேலில் ₹4,990 முதல் பிராண்டட் மைக்ரோவேவ் ஓவன்கள்! டாப் டீல்கள் இதோ
  7. வெயில் காலம் வருது.. புது பிரிட்ஜ் ரெடியா? அமேசான் சேலில் LG, Samsung, Haier டபுள் டோர் மாடல்கள் அதிரடி விலையில்! டாப் டீல்கள் இதோ
  8. ஸ்பீடு தான் முக்கியம்! அமேசான் சேலில் ₹20,000-க்குள் மிரட்டலான லேசர் பிரிண்டர் டீல்கள்! ₹39,000 வரை தள்ளுபடி
  9. மோட்டோ ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! G67 மற்றும் G77 ஸ்மார்ட்போன்களின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் லீக்
  10. மக்களின் சாய்ஸ் மாறுதா? 2025-ல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை நிலவரம் வெளியானது! Vivo கிங்.. Apple மிரட்டல் வளர்ச்சி
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »