ரியல்மியின் இரண்டு புதிய தயாரிப்புகள் மே 25-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறது!

ரியல்மியின் இரண்டு புதிய தயாரிப்புகள் மே 25-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறது!

மே 25 அன்று ‘Watch the TV’ என்று ரியல்மி ரசிகர்களை அழைத்துள்ளது

ஹைலைட்ஸ்
  • ரியல்மி வெளியீட்டு நிகழ்வு மே 25 அன்று மதியம் 12:30 மணிக்கு தொடங்கும்
  • நிகழ்வில் ரியல்மி டிவி மற்றும் ரியல்மி வாட்ச் வெளியிடப்படும்
  • நிகழ்வு நிறுவனத்தின் சமூக ஊடக சேனல்களில் ஸ்ட்ரீம் செய்யப்படும்
விளம்பரம்

ரியல்மியின் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட் டிவி ஆகியவை மே 25-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகின்றன. சீன நிறுவனம் சமீபத்தில் இந்த இரண்டு தயாரிப்புகளின் வெளியீட்டு தேதியை சமூக ஊடகங்களில் அறிவித்தது. நிறுவனம் ஏற்கனவே பல்வேறு ஊடகங்களுக்கு அறிமுகத்திற்கான அழைப்புகளை அனுப்பியுள்ளது. ரியல்மி வெளியீட்டு நிகழ்வை யூடியூப் உட்பட, கிட்டத்தட்ட எல்லா சமூக ஊடக தளங்களிலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பவுள்ளது.

நிகழ்வு மே 25 அன்று மதியம் 12:30 மணிக்கு தொடங்கும். ரியல்மி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட் டிவி அறிமுகத்தை Twitter, Facebook மற்றும் YouTube-ல் இருந்து ஒளிபரப்பவுள்ளது.

ரியல்மியின் முதல் ஸ்மார்ட் டிவி 43 அங்குல டிஸ்ப்ளேவுடன் வரும். இதில் ஆண்ட்ராய்டு டிவி மற்றும் Google உதவியாளர் ஆதரவு உள்ளது. இருப்பினும், சீன நிறுவனம் 43 அங்குல மாடலுடன் 32 அங்குல டிஸ்ப்ளே டிவியை அறிமுகப்படுத்தலாம்.

சீன நிறுவனம் கடந்த வாரம் ரியல்மி வாட்சிற்கான டீஸரையும் வெளியிட்டது. ஐபி 68 நீர் எதிர்ப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்சில், 1.4 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேஜெட்ஸ் 360-க்கு அளித்த பேட்டியில், ரியல்மி தலைவர் மாதவ் ஷெத், நிறுவனம் 2020-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்வாட்ச்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் என்று கூறினார்.

ஸ்மார்ட்வாட்ச் வெளியீடு சமீபத்தில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து வீடியோவை பதிவிடுவதன் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாதவ் ஷெத் இதே வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

வீடியோவில் உள்ள இந்த ஸ்மார்ட்வாட்சின் அளவு ஆப்பிள் வாட்சை நினைவூட்டுகிறது. இதில் வளைந்த டிஸ்ப்ளே உள்ளது. இந்த தயாரிப்பு ரியல்மி வாட்ச் என்ற பெயரில் சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Realme TV, Realme Watch
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Chromebook மாடல்களான CX14 மற்றும் CX15 அறிமுக செய்த ASUS நிறுவனம்
  2. ஆப்பிள் வாட்ச்களுக்கு இணையான அம்சம் இருக்கும் Redmi Watch Move
  3. HMD Global நிறுவனம் Mattel உடன் இணைந்து அறிமுகப்படுத்தும் Barbie Phone
  4. CMF Phone 2 Pro செல்போன் ஏப்ரல் 28ல் உலகமெங்கும் அறிமுகமாகிறது
  5. மார்க்கெட்டில் விலை குறைந்த 5G மாடல் போனாக அறிமுகமாகிறது Itel A95 5G
  6. 5G ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் புரட்சி செய்யப்போகும் OPPO K12s 5G செல்போன்
  7. OPPO நிறுவனம் தனது புதிய மிட் ரேஞ்ச் 5G ஸ்மார்ட்போன் OPPO A5 Pro 5G
  8. மோட்டோரோலாவின் முதல் லேப்டாப் Moto Book 60 இந்தியாவில் அறிமுகம்
  9. CMF Phone 2 Pro செல்போன் 10% வேகமான CPU உடன் அசத்தலாக வெளியாகிறது
  10. அட்ராசக்க அசத்தபோகும் அம்சங்களுடன் வெளியாகும் Vivo X200 Ultra ஸ்மார்ட்போன்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »