ஓப்போவின் முதல் ஸ்மார்ட் டிவி எப்போ ரிலீஸ்? 

ஓப்போவின் முதல் ஸ்மார்ட் டிவி எப்போ ரிலீஸ்? 

Photo Credit: Weibo/ Oppo

ஓப்போ, ஸ்மார்ட்போன்களுக்கு அப்பால் அதன் போர்ட்ஃபோலியோவை விரிவாக்க, தயாரிப்புகளின் சுற்றுச்சூழல் அமைப்பில் செயல்படுகிறது

ஹைலைட்ஸ்
  • ஓப்போ ஸ்மார்ட் டிவி 2020-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடப்படும்
  • ஓப்போ ஸ்மார்ட் டிவியைப் பற்றி இதுவரை அதிகம் அறியப்படவில்லை
  • ஓப்போ, சமீபத்தில் ஸ்மார்ட்வாட்ச் & வயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகப்படுத்தியது
விளம்பரம்

ஓப்போ தனது ஸ்மார்ட் டிவியை 2020-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தவுள்ளது என்று நிர்வாகி ஒரு சீன வலைத்தளத்திடம் தெரிவித்தார். சீன உற்பத்தியாளர், ஸ்மார்ட்போன்களுக்கு அப்பால் தனது போர்ட்ஃபோலியோவை விரிவாக்க திட்டமிட்டுள்ளதால் இந்த செய்தி வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச், ஓப்போ வாட்ச் மற்றும் இயர்பட்ஸையும் அறிமுகப்படுத்தியது - ஓப்போ என்கோ ஃப்ரீ மற்றும் என்கோ W31. சீன தொழில்நுட்ப போர்ட்டால் மேற்கோள் காட்டப்பட்ட நிர்வாகி தனது அறிக்கையில், நிறுவனம் தனது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) பார்வையில் செயல்படுகிறது.

MyDrivers-ன் அறிக்கையின்படி, சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர், ஸ்மார்ட் டிவியில் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் முதல் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்யப்போவதாகவும் Oppo துணைத் தலைவர் லியு போ (Liu Bo) ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஓப்போ ஸ்மார்ட் டிவியைப் பற்றி போ எதையும் வெளிப்படுத்தவில்லை.

தனது சொந்த ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்துவதன் மூலம், பல சந்தைகளில் தங்களது சொந்த அளவிலான ஸ்மார்ட் டிவிகளைக் கொண்டிருக்கும் Xiaomi, Huawei, OnePlus, Motorola மற்றும் Nokia போன்ற நிறுவனங்களுடன் ஓப்போவும் சேர்கிறது. ஓப்போ ஸ்பின்-ஆஃப் Realme இந்த சந்தையில் நுழைகிறது.

ஓப்போ ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டால் இயக்கப்படும் என்றும், ஒன்பிளஸ் மற்றும் Samsung டிவிகளில் கிடைக்கும் அம்சங்களைக் கொண்டுவரும் என்றும் முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓப்போவின் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் தெரியவில்லை.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  2. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  3. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  4. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  5. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  6. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  7. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  8. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  9. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  10. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »