ஷாவ்மி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் 2 அறிமுகம்!

இந்தியாவில் எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2 விலை ரூ.4,499 ஆகும்.

ஷாவ்மி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் 2 அறிமுகம்!

இந்தியாவில் ஷாவ்மியில் இருந்து ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களின் முதல் ஜோடி இதுவாகும்

ஹைலைட்ஸ்
  • எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2-வில் 14.2 மிமீ டிரைவர் உள்ளது
  • இந்த வயர்லெஸ் இயர்போன்கள் மே 12 மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்
  • இதில் SBC, AAC மற்றும் LHDC புளூடூத் கோடெக் ஆதரவு உள்ளது
விளம்பரம்

Xiaomi இந்தியாவில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போனை அறிமுகப்படுத்துகிறது. புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2 வெள்ளிக்கிழமையன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதேசமயம் நிறுவனத்தின் ஸ்ட்ரீமிங் பாக்ஸ் ஷாவ்மி எம்ஐ பாக்ஸ் 4 கே மற்றும் புதிய எம்ஐ 10 ஸ்மார்ட்போன் ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2 விலை ரூ.4,499 ஆகும். இருப்பினும், சீன நிறுவனம் இந்த இயர்போனை மே 12-17 தேதிகளில் ரூ.3,999 ரூபாய்க்கு விற்பனை செய்யும். இந்த வயர்லெஸ் இயர்போன் மே 12 மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். இந்த தயாரிப்பு அமேசான், எம்ஐ.காமில் இருந்து கிடைக்கிறது.

ஷாவ்மியின் புதிய வயர்லெஸ் இயர்போன் ஆப்பிள் ஏர்போட்களைப் போலவே இருக்கின்றன. 14.2 மிமீ டைனமிக் டிரைவர் கொண்டது. இந்த சாதனம் புளூடூத் 5.0 உடன் எஸ்.பி.சி, ஏஏசி மற்றும் எல்எச்.டி.சி புளூடூத் கோடெக்குகளை ஆதரிக்கிறது.

புதிய இயர்போனில் 30 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த சார்ஜிங் கேசில் 250 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. டச் சென்சிடிவ் கண்ட்ரோல் வழியாக இந்த இயர்போனில் பிளேபேக்கைக் கட்டுப்படுத்தலாம். கூகுள் அசிஸ்டெண்ட், அலெக்சா மற்றும் சிரி ஆதரவு உள்ளது.


Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிளின் அதிக விலையுள்ள மடிக்க முடியாத போனாக ஐபோன் 18 புரோ மேக்ஸ் வரலாம்: கசிவு தகவல்!
  2. விரிவாக்கப்பட்ட தரவு பரிமாற்ற ஆதரவுடன் ஐபோனில் இருந்து மாறுவதை எளிதாக்குகிறது 'ஆண்ட்ராய்டு 17'
  3. 2026-இல் உங்கள் ஏர்டெல் இ-சிம்மை (Airtel eSIM) செயல்படுத்துவது எப்படி: படிப்படியான வழிகாட்டி
  4. இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 'ஒன்பிளஸ் N6x' பேட்டரி திறன் வெளிப்படை
  5. வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் புதிய உருண்டையான செய்தி குமிழி வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது: அறிக்கை
  6. ஆப்பிள் ஹெல்த், மருத்துவப் பதிவுகளுடன் தனிப்பயன் பதில் தர ஓபன்ஏஐ 'சாட்ஜிபிடி ஹெல்த்' அறிமுகம்!
  7. iQOO Z11 Lite 5G vs Moto G37 Power vs Oppo K14x 5G: இந்தியாவில் விலை, அம்சங்கள் ஒப்பீடு
  8. 50-மெகாபிக்சல் கேமரா, 6,500mAh பேட்டரியுடன் iQOO Z11 Lite இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  9. மோட்டோ பேட் 70 ஆகஸ்ட் 9ல் இந்தியாவில் அறிமுகம்; டைமன்சிட்டி 6400, 10,200mAh பேட்டரியுடன் வருகிறது!
  10. வாட்ஸ்அப் இருபடிச் சரிபார்ப்பு(Two-Step Verification) PINக்கு பதிலாக வலுவான பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தக்கூடும்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »