அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனை மீண்டும் வந்துள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் பண்டிகை விற்பனை செப்டம்பர் 29 முதல் துவங்கும். செப்டம்பர் 28 ஆம் தேதி மதியம் 12 மணி (நண்பகல்) முதல் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு ஆரம்ப அணுகலை வழங்கும். அதே சமயம் பிளிப்கார்ட் தனது மொபைல் போன் ஒப்பந்தங்களை செப்டம்பர் 30 ஆம் தேதி திறக்கும். ஆன்லைன் சில்லறை நிறுவனங்களும் ஏற்கனவே தொலைபேசிகளில் வரவிருக்கும் முக்கிய சலுகைகள் சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளன. தள்ளுபடியைத் தவிர, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன்களுக்கான தொகுக்கப்பட்ட சலுகைகளை exchange offers, no-cost EMI payment options, cashback மற்றும் பிற ஒப்பந்தங்கள் போன்ற வடிவங்களில் வழங்கவிருக்கிறது.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையில் கிடைக்கும் அனைத்து மொபைல் போன் சலுகைகளும் இங்கே:
Oneplus
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2019 விற்பனை Oneplus7 மற்றும் Oneplus7 Pro ஆகியவற்றில் தள்ளுபடியை வழங்கும். Oneplus7 விலையில் ரூ. 3,000, Oneplus 7 Pro விலையில் ரூ. 4000 குறைத்துள்ளது. அதாவது Oneplus7 (6 ஜிபி, 128 ஜிபி) ரூ. 29,999 ஆகவும், Oneplus7 Pro பேஸ் வேரியண்ட் ரூ. 44.999 ஆகும். இந்த போன்களின் மற்ற வகைகளுக்கும் தள்ளுபடிகள் கிடைக்குமா என்பதை அமேசான் வெளியிடவில்லை.
Samsung
Samsung Galaxy M30 தள்ளுபடி விலையில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2019 விற்பனையின் போது 9,999 ரூபாய் (MRP ரூ. 11,000). Galaxy Note 9 விலை ரூ. 42,999 (MRP ரூ .73,600). சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy M30s ரூ.1,000 மதிப்புள்ள அமேசான் பே கேஷ்பேக்குடன் கிடைக்கும்.
இவை தவிர, Samsung Galaxy M10 விலை ரூ. 7,999 (MRPரூ. 9,290)-யாகவும், Galaxy M20 விலை ரூ. 9,999 (MRP ரூ .11,290) என பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதலாக, அமேசானில் புதிய Galaxy Note10 ஐ வாங்கும்போது உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் எக்ஸ்சேஞ் மதிப்பில் 6,000 ரூபாய் சலுகையில் வழங்குகிறது.
Asus
வரவிருக்கும் பிக் பில்லியன் நாட்கள் 2019 விற்பனையின் போது Asus தனது ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வழங்க பிளிப்கார்ட்டுடன் இணைந்துள்ளது. Asus 6Z (6 ஜிபி, 64 ஜிபி) ரூ. 27,999 (MRP ரூ .31,999), 8 ஜிபி ரேம், 256 ஜிபி வேரியண்டில் ரூ. 35,999 (MRP ரூ .39,999) ஆகிய விலையில் கிடைக்கும்.
Asus 5Z அனைத்து வகைகளிலும் ரூ. 5,000 தள்ளுபடியில் கிடைக்கும். Asus Max Pro M1 மற்றும் Asus Max M 1 (3 ஜிபி, 32 ஜிபி) தொலைபேசியின் அனைத்து வகைகளுக்கும் ரூ. 500 தள்ளுபடி பொருந்தும். Asus Max M2 பிக் பில்லியன் நாட்கள் 2019 விற்பனையின் போது 1,000 ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கும்.
Realme
Realme-யின் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது தள்ளுபடி விலையில் கிடைக்கும். அந்த தள்ளுபடிகள் நிறுவனத்தின் பண்டிகை நாட்கள் விற்பனைக்கு ஒத்தவை. அவற்றை Realme-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.
Realme C2, Realme 5, மற்றும் Realme 3 Pro ஆகியவை பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது ரூ.1,000 தள்ளுபடியின் கிடைக்கும். Realme 2 Pro-விற்கு பிளிப்கார்ட் 1,991 ரூபாய் தள்ளுபடியும், Realme 5 Pro-விற்கு 1,000 ரூபாய் தள்ளுபடியிலும் அனைத்து ப்ரீபெய்ட் ஆர்டர்களுக்கும் கிடைக்கும். Realme U1 மற்றும் Realme 5 (இரண்டு வகைகளும்) ரூ. 1,000 தள்ளுபடியில் கிடைக்கும்.
Xiaomi
பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்கள் 2019 விற்பனையில், புதிய Redmi Note 7 Pro வாங்கும்போது உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் எக்ஸ்சேஞ் மதிப்பில் 1,000 ரூபாய் கூடுதல் தள்ளுபடியில் வழங்கவுள்ளது. Redmi K20 தொகுக்கப்பட்ட சலுகைகளுடன் 19,999 (MRP ரூ. 22,999) கிடைக்கிறது. பிக் பில்லியன் நாட்கள் 2019 விற்பனையின் போது Redmi K20 Pro-வின் விலை ரூ.24,999 (MRP ரூ. 28,999)- யாகவும், Redmi Note 5 Pro-வின் ரூ. 9,999 (MRP ரூ .14,999) - யாகவும் விற்பனை செய்யப்படும்.
Motorola
பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்கள் 2019 விற்பனையின் போது லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா, Motorola One Vision, மற்றும் Motorola One Action தள்ளுபடியில் வழங்கும். Motorola One Action ரூ. 11,999 (MRP ரூ. 13,999), Motorola One Vision ரூ. 5,000 தள்ளுபடியிலும் விற்பனை செய்ய இருக்கிறது. Moto G7 விற்பனையின் போது 7,500 ரூபாய் தள்ளுபடியில் வழங்கும்.
Lenovo
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Lenovo Z6 Pro-விற்கு ரூ. 2,000 தள்ளுபடி செய்துள்ளது. Lenovo A6 Note-ன் விலை விற்பனையின் போது 6,999 ரூபாயும், Lenovo K10 Note-ன் விலை ரூ. 11.999 ஆகும். பட்ஜெட் தொலைபேசியான Lenovo K9 ரூ. 6.499 என அறிவித்துள்ளது.
Apple
அமேசான் அல்லது பிளிப்கார்ட் ஆகியவை ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கான சரியான விலையை வரவிருக்கும் விற்பனையின் போது வெளியிடவில்லை. இருப்பினும், இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலமான ஐபோன் மாடல்களிலும் 'மிகக் குறைந்த விலை' விற்பனை செய்வதை பிளிப்கார்ட் சுட்டிக்காட்டுகிறது. முந்தைய விற்பனையின் போது, பிளிப்கார்ட் iPhone XR தள்ளுபடி வழங்கியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்