Xiaomi-யின் Mi Watch Color-ன் விவரங்கள் கசிந்தன...!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 31 டிசம்பர் 2019 14:38 IST
ஹைலைட்ஸ்
  • Xiaomi Mi Watch Color, 10 விளையாட்டு முறைகளை வழங்கும்
  • ithu 1.39-inch (454 x 454 pixels) AMOLED டிஸ்பிளேவை பேக் செய்யும்
  • Xiaomi Mi Watch Color, Bluetooth 5.0 BLE & NFC ஆதரவை வழங்கும்

Xiaomi Mi Watch Color-ன் பேட்டரி ஒரே சார்ஜில் 14 நாட்கள் நீடிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Photo Credit: Weibo

Xiaomi, இந்த வார தொடக்கத்தில் Mi Watch Color-ஐ அறிவித்தது. ஆனால் இதுவரை நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்வாட்சின் வன்பொருளை வெளியிடவில்லை. இருப்பினும், Mi Watch Color-ன் சில்லறை தொகுப்பின் சில நேரடி படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. மேலும் அவை டிஸ்பிளே அளவு மற்றும் தெளிவுத்திறன், பேட்டரி திறன் மற்றும் இணைப்பு அம்சங்கள் போன்ற சில முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்துகின்றன. 

Mi Watch Color-ன் சில்லறை தொகுப்பின் கசிந்த படங்களுடன் தொடங்கி, தொகுப்பில் அச்சிடப்பட்ட தயாரிப்பு விவரங்கள் 454 x 454 pixels தெளிவுதிறன் கொண்ட 1.39-inch AMOLED டிஸ்ப்ளேவை வெளிப்படுத்துகின்றன. XMWT06 என்ற மாடல் எண்ணைக் கொண்டிருக்கும் Mi Watch Color, GPS, Glonass மற்றும் NFC உடன் Bluetooth 5.0 BLE தரத்தை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு 4.4 KitKat அல்லது அதிக பதிப்பில் இயங்கும் போன்களுடன் இணக்கமாக இருக்கும்.

Xiaomi Mi Watch Color-ன் பேட்டரி திறன் 420mAh என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிகாரப்பூர்வ Mijia Weibo சேனலின் ஒரு பதிவின் படி, இது ஒரே சார்ஜில் 14 நாட்கள் வரை நீடிக்கும். Mi Watch Color-ன் சில்லறை தொகுப்பின் கசிந்த படங்கள் 5ATM நீர் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகின்றன. அதாவது வாட்ச் 50 மீட்டர் ஆழம் வரை 10 நிமிடங்களுக்கு நீரில் செயல்பட முடியும். கூடுதலாக, இதய துடிப்பு (heart rate) மற்றும் நீச்சல் கண்காணிப்பு (swim-tracking) அம்சங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், உடற்பயிற்சி கண்காணிப்புக்காக Mi Watch Color-வில் 10 தொழில்முறை விளையாட்டு முறைகளுடன் முன்பே ஏற்றப்படும் என்பதையும், அவை தனிப்பயன் விளையாட்டு வழிமுறைகளை நம்பியிருக்கும் என்பதையும் ஜியோமி உறுதிப்படுத்தியுள்ளது. பல வண்ணங்கள் மற்றும் பொருள் தேர்வுகளில் பட்டைகள் வழங்குவதைத் தவிர, Mi Watch Color தனிப்பயனாக்கத்திற்கான வாட்ச் முகங்களின் பரந்த பட்டியலுடன் வரும். ஸ்மார்ட்வாட்ச் தொடர்பான கூடுதல் விவரங்கள் சீனாவில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் நாட்களில் வெளிப்படும்.

Xiaomi Mi Watch Color With Heart Rate Tracking, Sleep Monitoring Capabilities Launched

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Xiaomi Mi Watch Color, Xiaomi Mi Watch Color Specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. புது Samsung A-சீரிஸ் வருது! A07 5G இந்த மாசம் லான்ச்? A57-ல் பெரிய அப்கிரேட்! Samsung ஃபேன்ஸ் ரெடியா
  2. புதுசா 2 பிளான்! Disney+ Hotstar, ZEE5-ஐ விட கம்மி விலையில் Tata Play Binge-ல் புது OTT கன்டென்ட்
  3. புது Vivo போன் வாங்க ரெடியா? V70, T5x 5G-க்கு BIS சர்ட்டிபிகேட் கிடைச்சிருச்சு! லான்ச் தேதி எப்போ
  4. புது Poco ஃபிளாக்ஷிப் வருது! Poco X8 Pro-க்கு BIS சான்றிதழ்! ₹30,000 ரேஞ்சில் இந்த போனை எதிர்பார்க்கலாமா
  5. புது போன் வாங்க வெயிட் பண்ணுங்க! Realme 16 Pro+ வருது! பெரிஸ்கோப் கேமரா, 7000mAh பேட்டரி
  6. Starlink நெட்வொர்க் வருது! ஆனா மாசம் ₹4,000 கட்டணுமா? Starlink-ன் முக்கியமான விளக்கம்! வதந்திகளை நம்பாதீங்க
  7. Apple Watch யூஸர்களுக்கு ஒரு ட்ரீட்! Fitness+ வருது! Workouts, Guided Meditation, Time to Walk – எல்லாம் ஒரே ஆப்ல
  8. புது Smartwatch வேணுமா? OnePlus Watch Lite வருது! ₹5,000-க்குள் இந்த அம்சங்கள் சான்ஸே இல்லை
  9. Insta-ல ஒரு மாஸ் அப்டேட்! உங்க ஃபேவரைட் ஸ்டோரிஸ இனி சுலபமா ரீஷேர் பண்ணலாம்! செக் பண்ணுங்க
  10. புது Narzo 90 டிசைன் லீக்! ₹15,000 ரேஞ்சில் 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே! நீங்க வாங்குவீங்களா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.