8 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகளுக்காக 'நெட்ஃபிக்ஸ் பிளேகிரவுண்ட்' என்ற புதிய செயலியை நெட்ஃபிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.இது பிரபலமான குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட கேம்கள் மற்றும் ஊடாடும் (Interactive) அம்சங்களைக் கொண்டுள்ளது.இந்தச் செயலி விளம்பரங்கள் அல்லது கூடுதல் கட்டணங்கள் ஏதுமின்றி, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை வழங்குகிறது.தற்போது ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் மட்டும் இது கிடைக்கிறது.வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் இந்தச் செயலி இந்தியாவிலும் உலகளவிலும் அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்கும்.
ஏற்கனவே பல OTT தளங்களில் விளம்பரங்கள் மூலம் வருவாய் காணும் திட்டங்கள் பின்பற்றப்படுகிறது. ஆனால், Netflix நிறுவனம் மட்டுமே ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரங்களே இல்லதாக ஒரு தளமாக திகழ்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
WhatsApp –ன் புதிய அப்டேட்டாக NetFlix –ல் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸின் ட்ரெய்லர்களை பார்க்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. பயனாளி ஒருவர் ட்ரெய்லரை ஷேர் செய்யும்போது, அது பெரிய Thmbnail ஆக தோற்றம் அளித்து, வீடியோ Playஆகும். இருப்பினும் இந்த வசதியும் iOS ஆப்பிள் போன்களில் மட்டுமே வந்துள்ளது.