iQOO 15 Apex வண்ண விருப்பம் வெளியிடப்பட்டது, ஏப்ரல் 1 அன்று இந்தியாவில் அறிமுகம்
iQOO 15 'Apex' வண்ண மாடல் ஏப்ரல் 1-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகிறது. இது ஏற்கனவே உள்ள லெஜண்ட் மற்றும் ஆல்ஃபா பிளாக் நிறங்களுடன் மூன்றாவது விருப்பமாக இணைகிறது. இந்த Apex மாடல் சிவப்பு மற்றும் சாம்பல் நிறங்கள் கலந்த தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.இதில் 6.85-அங்குல 2K சாம்சங் M14 8T LTPO AMOLED உயர்தர டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது.144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6,000 நிட்ஸ் பிரகாசம் போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த போன் இயங்குகிறது.