ஐக்யூ நிறுவனம் தனது Z சீரிஸில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Z11 Turbo ஸ்மார்ட்போனை ஜனவரி 15-ம் தேதி அறிமுகம் செய்கிறது
Photo Credit: iQOO
iQOO ஜனவரி 15 ஆம் தேதி சீனாவில் Z11 டர்போவை அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்னைக்கு நம்ம டெக் உலகத்துல இருக்குற ஒரு பெரிய நியூஸ் பத்தி தான் பார்க்கப்போறோம். "பட்ஜெட் விலையில தரமான பெர்ஃபார்மன்ஸ்" வேணும்னா நம்ம மைண்டுக்கு வர்ற முதல் பிராண்ட் iQOO தான். அந்த வகையில, அவங்களோட அடுத்த மான்ஸ்டர் போனா சொல்லப்படுற iQOO Z11 Turbo வோட லான்ச் டேட் (Launch Date) இப்போ அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்பட்டுருக்கு. ஐக்யூ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை 'Z' சீரிஸ் போனான Z11 Turbo-வை வரும் ஜனவரி 15, 2026 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்போறதா அறிவிச்சிருக்காங்க. இந்த போனை வாங்க இப்போவே அங்க ப்ரீ-ஆர்டர் (Pre-order) தொடங்கிடுச்சு. இது சீனாவோட லோக்கல் டைம் படி சாயந்திரம் 7 மணிக்கு அறிமுகமாகப்போகுது.
இந்த போன் பாக்குறதுக்கு ரொம்பவே பிரீமியமா இருக்கு. மெட்டல் பிரேம் மற்றும் கிளாஸ் பேக் (Glass Back) கொடுக்கப்பட்டிருக்கு. இதுல Midnight Black, Sky White, Halo Pink, மற்றும் Floating Light (Blue) என நாலு சூப்பரான கலர்கள்ல வரப்போகுது. முக்கியமா இதோட தடிமன் வெறும் 7.9mm தான், ஆனா உள்ள இருக்குற பேட்டரியை கேட்டா நீங்க ஷாக் ஆகிடுவீங்க. ஆமா நண்பர்களே! 7.9mm ஸ்லிம்மான போன்ல, இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு 7,600mAh பேட்டரியை ஐக்யூ கொண்டு வந்திருக்காங்க. இதுக்கு சப்போர்ட் பண்ண 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கு. ஒரு தடவை சார்ஜ் போட்டா ரெண்டு நாளைக்கு கவலையே இல்லைன்னு சொல்றாங்க.
போட்டோகிராபி லவ்வர்ஸுக்காக இதுல முதல் முறையா 200MP Ultra-clear மெயின் கேமரா கொடுக்கப்பட்டிருக்கு. கூடவே 8MP அல்ட்ரா-வைட் லென்ஸும் இருக்கு. செல்ஃபிக்காக 32MP கேமரா இருக்கு. டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 6.59-இன்ச் 1.5K 144Hz AMOLED பேனல் இருக்கு. இதனால கேம் விளையாடும்போதும், படம் பார்க்கும்போதும் விஷுவல்ஸ் செம ஸ்மூத்தா இருக்கும். இதுல இருக்குறதுதான் இப்போதைய டாப் கிளாஸ் Snapdragon 8 Gen 5 சிப்செட். இது கூடவே ஐக்யூவோட சொந்த தயாரிப்பான Q2 கேமிங் சிப் (Q2 chip) இருக்குறதால, பெரிய பெரிய கேம்ஸ்களை கூட அசால்ட்டா ஹேண்டில் பண்ணும். இதுமட்டும் இல்லாம, பாதுகாப்புக்காக Ultrasonic Fingerprint Sensor மற்றும் IP68/IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டிருக்கு.
சீனாவுல அறிமுகமான சில வாரங்கள்லயே இது இந்தியாவுக்கு வரும்னு எதிர்பார்க்கப்படுது. இந்தியாவுல இது iQOO 15R அப்படிங்கிற பேர்ல வர வாய்ப்பு இருக்கு. இதோட விலை இந்திய ரூபாயில் சுமார் ரூ. 32,000 முதல் ரூ. 38,000 வரை இருக்கும்னு கணிக்கப்படுது. இந்த போனோட பேட்டரி மற்றும் கேமரா காம்பினேஷன் உங்களுக்கு பிடிச்சிருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்