2026 Q1: உலகின் அதிகம் விற்ற போன் ஐபோன் 17; சிறந்த ஆண்ட்ராய்டு போன் சாம்சங் கேலக்ஸி A07 4G
ஐபோன் 17 சீரிஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 (iPhone 17) ஆகிய மூன்று மாடல்களும் குறிப்பிடத்தக்க செயல்திறன் மேம்பாடுகளுடன் வந்தன. இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் தனது முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, ஸ்டாண்டர்ட் மாடலில் மிக முக்கியமான மேம்பாடுகளைக் கொண்டுவந்தது. இதில் அதிக ரிஃப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், டூயல் 48-மெகாபிக்சல் ரியர் கேமரா யூனிட் மற்றும் ப்ரோ மாடல்களில் உள்ளது போன்ற அதே செல்ஃபி கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் (Q1) உலகளவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ஐபோன் 17 இருந்ததாக புதிய சந்தை ஆய்வு அறிக்கை கூறுகிறது.