அண்ட்ராய்டு பீடாவில் புதிய அப்டேட்கான சோதனை நடைபெருகிறது.
வாட்ஸ் ஆப் நிறுவனம் சார்பாக அடுத்த அப்டேட்டை பீடாவில் சோதனை செய்து வருகிறது. இம்முறை வாட்ஸ் ஆப்பில் இருக்கும், பகிரப்படும் மீடியா பிரிவில் வந்துள்ளது.
பீடா அண்ட்ராய்டில் சோதனைக்கு தயாராகும் இந்த புதிய அப்டேட் தனிப்பட்ட மெசேஜ்களுக்கும் குரூப் மெசேஜ்களுக்கும் பொருந்தும். மேலும் வந்துள்ள அப்டேட்டில் பகிரப்பட்ட புகைப்படத்தை ப்ரோஃபையில் பிக்சராகவோ, குரூப் ஐக்கானாகவோ அல்லது வால்பேப்பராகவோ வைத்து கொள்ள வசதிகளை கொண்ட புதிய ஓவர்ஃப்ளோ அப்டேட் வந்துள்ளது.
![]()
அத்துடன் மெனுவில் இருக்கும் ஆப்ஷன்களையும் குறைத்துள்ளது இந்த புதிய வாட்ஸ் ஆப் அப்டேட் வெர்ஷன் v2.19.18.
மூன்று புள்ளிகளுடன் குறிக்கப்படும் இந்த புதிய மீடியா ஷேரிங் மெனு அந்த புகைப்படம் யாரால் எப்போது பகிரப்பட்டது என்றும் அதை தற்போது என்ன செய்ய முடியும் போன்ற பல ஆப்ஷன்களுடன் வந்துள்ளது. ஏற்கனவே உள்ள ரோட்டேட்,ஷேர், செட் அஸ் ப்ரோஃபையில் பிக்சர் போன்ற எல்லா ஆப்ஷன்களும் இந்த மூன்ற புள்ளி குறியிட்டுக்குள்ளே வந்துவிடும். மேலும் இந்த புதிய அப்டேட்டால் ஸ்க்ரீன் ஸ்பேஸ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைவிரல் ரேகை பதிவை கொண்டு மெசேஜ்களை திறக்கும் அப்டேட் போன்ற பல அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளது என தகவல்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Tipped to Sport 'Transparent' Rear Panel, Hole Punch Display Cutout