Photo Credit: Reuters
வோடபோன் ஐடியா மூன்றாவது நிதியாண்டின் காலாண்டில் 4,000 க்கும் மேற்பட்ட தனித்துவமான பிராட்பேண்ட் டவர்களைச் சேர்த்தது.
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போது நாம் பார்க்க இருப்பது வோடபோன் ஐடியா (Vi) 5ஜி சேவைகள் பற்றி தான்.
வோடபோன் ஐடியா (Vi) செவ்வாயன்று இந்தியாவில் தனது 5G சேவைகளை வணிக ரீதியாக அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. மக்கள்தொகை கவரேஜை 41 மில்லியன் அதிகரித்துள்ளதாகக் கூறியது. முதலில் 2024-25 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தனது திட்டங்களை வெளியிட்டது. மார்ச் மாதத்தில் மும்பையில் 5G சேவைகள் முதலில் தொடங்கப்படும் என்று கூறி இருந்தது. இப்போது ஏப்ரல் மாதத்தில் மேலும் நான்கு நகரங்களுக்கு 5ஜி சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 2024 இல், Vi முதன்முதலில் நாடு முழுவதும் 19 வட்டங்களில் 5G செயல்பாட்டைத் தொடங்கியது, இருப்பினும், அந்த நேரத்தில் அது வணிக ரீதியாக வெளியிடப்படவில்லை. ஆனால் வோடபோனுக்கு முன்னதாகவே ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டும் 2022ல் 5G சேவைகளை அறிமுகப்படுத்தி இருந்தன.
மும்பைக்குப் பிறகு வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் ஏப்ரல் 2025ல் பெங்களூரு, சண்டிகர், டெல்லி மற்றும் பாட்னாவிற்கு தனது சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கட்டத்தில் 5G கவரேஜைப் பெறக்கூடிய வேறு எந்த நகரங்களின் பெயரையும் குறிப்பிடவில்லை. முக்கிய புவியியல் பகுதிகளை இலக்காகக் கொண்டு 5G சேவைகளை படிப்படியாக வெளியிடும் பணி நடைபெற்று வருகிறது" என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷயா மூந்த்ரா ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
5G வெளியீட்டைத் தவிர, கடந்த ஒன்பது மாதங்களில் 4G மக்கள்தொகை கவரேஜின் விரைவான விரிவாக்கத்தையும் Vi எடுத்துக்காட்டியது. மார்ச் 2024 இல் 1.03 பில்லியன் மக்கள்தொகையை உள்ளடக்கியதாகவும், அதை 41 மில்லியனாக விரிவுபடுத்தி, டிசம்பர் 2024 இறுதிக்குள் 1.07 பில்லியனை எட்டியதாகவும் நிறுவனம் கூறியது.
அதே நேரத்தில் மொத்த சந்தாதாரர்டிசம்பர் காலாண்டில் 199.8 மில்லியனாக இருந்ததாகவும், முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் 215.2 மில்லியனாக இருந்ததாகவும், இது 15.4 மில்லியன் சரிவைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இருந்தாலும் கட்டண உயர்வுகள் மற்றும் பயனர்கள் அதிக விலை கொண்ட திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வருவாய் உயர்வு அடைந்துள்ளது. மேலும், இந்த காலாண்டில் 4,000க்கும் மேற்பட்ட தனித்துவமான பிராட்பேண்ட் கோபுரங்களை நிறுவியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இணைப்புக்குப் பிறகு ஒரே காலாண்டில் இது மிகப்பெரிய கூடுதலாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது வோடபோன் ஐடியா. குறிப்பாக வீக்கெண்ட் டேட்டா (Vodafone Idea) ரோல்ஓவர், இரவு நேர இலவச டேட்டா போன்ற சிறந்த சலுகைகள் வழங்குகிறது வோடபோன் ஐடியா நிறுவனம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்