இந்தியாவில் விற்பனையைத் தொடங்கும் எம்.ஐ-யின் புதிய டிவி மாடல்கள்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 18 ஜனவரி 2019 19:45 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் எம்ஐ டிவி 4X ப்ரோ 39,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • எம்ஐ டிவி 4A ப்ரோ ரூபாய் 22,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • இரண்டு தொலைக்காட்சிகளும் யுஐ பாட்ச்வால் மூலம் இயங்குகிறது.

இந்தப் புதிய வகை தொலைக்காட்சிகளை ஃப்ளிப்கார்ட், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ரிடெயில் கடைகளில் வாங்கலாம்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்.ஐ நிறுவனத்தின் தொலைக்காட்சி வரிசைகள் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. இதன் மூலம் தற்போது எம்.ஐ டிவி 4X ப்ரோ (55 இன்ச்) மற்றும் எம்.ஐ டிவி 4A ப்ரோ (43 இன்ச்) இந்தியச் சந்தைகளில் விற்கப்பட உள்ளன.

சீன நிறுவனமான எம்.ஐ-யின் தயாரிப்புகளுக்கு இந்தியர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மூலம் வாடிக்கையாளர்களை கவர மூடிவெடுத்துள்ளது அந்நிறுவனம். இந்தப் புதிய வகை தொலைக்காட்சிகளை ஃப்ளிப்கார்ட், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ரீடெயில் கடைகளில் வாங்கலாம்.

கடந்த வாரம் எம்ஐ சவுண்டு பார்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஐ ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் பாட்ச்வால் யுஐ மூலம் இயங்குகிறது.

மேலும் தற்போது விற்பனைக்கு வந்துள்ள எம்.ஐ டிவி 4X ப்ரோ (55 இன்ச்) மற்றும் எம்.ஐ டிவி 4A ப்ரோ (43 இன்ச்) என இரண்டு மாடல்களும் மெல்லிசான ஸ்கிரீனைக் கொண்டது. இதில் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களும், வாய்ஸ் கமாண்டும் அடக்கம். மேலும், எம்.ஐ டிவி 4X ப்ரோ (55 இன்ச்) 39,999 ரூபாய்க்கும், எம்.ஐ டிவி 4A ப்ரோ (43 இன்ச்) 22,999 ரூபாய்க்கு இன்று (15.1.19)  மதியம் 12 மணி முதல் விற்பனையைத் தொடங்கும் என எம்ஐ நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எம்.ஐ டிவி 4X ப்ரோ (2160x3840 பிக்சல்) 4K UHD டிஸ்பிளேவைக் கொண்டது. 64 பிட் அமோலாஜிக் பிராசஸரின் உதவியுடன் இயங்கும் இந்தத் தொலைக்காட்சிக்கு 2ஜிபி ரேமும் 8 ஜிபி சேமிப்பு வசதியும் இருக்கும். அத்துடன் ப்ளூ-டூத் மற்றும் வை-ஃபை வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 43 இன்ச் எம்.ஐ டிவி 4A ப்ரோ-வைப் பொறுத்தவரை (1920x1080 பிக்சல்) டிஸ்ப்ளேவும் 1ஜிபி ரேமுடன் வெளியாகுகிறது. 8 பிட் கலர் டெப்துடன் விற்பனைக்கு வருகிறது இந்தத் தொலைக்காட்சி.


What's good about the new Xiaomi TVs and soundbar? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Mi TV, Xiaomi Mi TV 4X Pro 55, Xiaomi Mi TV 4A Pro 43, Flipkart

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இனி ஃபோல்டபிள் போன்லயும் தத்ரூபமான போட்டோஸ்! சாம்சங் Z Fold 8-ன் மிரட்டலான கேமரா சிறப்பம்சங்கள் கசிந்தது
  2. ஆப்பிள், குவால்காமுக்கு செம டஃப்! சாம்சங்கின் 2nm எக்ஸினோஸ் 2600 வந்தாச்சு
  3. 8.9mm தடிமன்.. 10 நாள் பேட்டரி! ஒன்பிளஸ் வாட்ச் லைட் (OnePlus Watch Lite) லான்ச் ஆகிடுச்சு
  4. 200MP கேமரா.. ஆனா சைஸ் ரொம்ப சின்னது! OPPO Reno15 Pro Mini - இதோட டிசைனை பார்த்தா அசந்துடுவீங்க
  5. வந்துவிட்டது புது Oppo Pad Air 5: 2.8K Display, 10,050mAh Battery & 5G Support
  6. அமேசான் பே-வில் அதிரடி! ₹5,000 வரை பேமெண்ட் பண்ண இனி பின் நம்பர் போட வேணாம்
  7. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. ரியல்மி 16 ப்ரோ+ (Realme 16 Pro+) ரகசியங்கள் அம்பலம்
  8. இனி ஆப் ஸ்டோர்ல எதை தேடினாலும் விளம்பரமா தான் இருக்கும்! ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு! கடுப்பில் யூசர்கள்
  9. 5G சப்போர்ட்.. 12.1-இன்ச் டிஸ்ப்ளே! வந்துவிட்டது புது OnePlus Pad Go 2! விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
  10. 7,400mAh பேட்டரியா? ஒன்பிளஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரியுடன் வந்துவிட்டது OnePlus 15R
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.