சமீபத்திய ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான், அன்லிமிடெட் ஜியோ-டு-ஜியோ மற்றும் லேண்ட்லைன் குரல் அழைப்பு பலன்களையும் வழங்குகிறது.
ஜியோ, ரூ.2,121 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானுக்கு, அன்லிமிடெட் ஜியோ-டு-ஜியோ மற்றும் லேண்ட்லைன் குரல் அழைப்புகளை வழங்குகிறது
ரிலையன்ஸ் ஜியோ, 336 நாட்கள் செல்லுபடியுடன், புதிய ரூ.2,121 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானைக் கொண்டுவந்துள்ளது. புதிய ரீசார்ஜ் ப்ளான் தினசரி அடிப்படையில் 1.5 ஜிபி அதிவேக டேட்டா அணுகலுடன் வருகிறது. அன்லிமிடெட் ஜியோ-டு-ஜியோ மற்றும் லேண்ட்லைன் குரல் அழைப்பு சலுகைகளும் இதில் அடங்கும். ரூ.2,121 ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் அடிப்படையில், ரூ.2,020 ப்ரீபெய்ட் ப்ளான் வழங்கிய அதே பலன்களை வழங்குவதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த ப்லான் 365 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டது மற்றும் “2020 இனிய புத்தாண்டு சலுகையின்” ஒரு பகுதியாக டிசம்பரில் அறிமுகமானது.
ரூ.2,121 ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் விவரங்கள்:
ரூ.2,121 ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான், 336 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அதிவேக டேட்டாவைக் கொண்டுவருகிறது. டேட்டா பலன்களுக்குக் கூடுதலாக, இந்த புதிய ப்ரீபெய்ட் ப்ளான், அன்லிமிடெட் ஜியோ-டு-ஜியோ மற்றும் லேண்ட்லைன் குரல் அழைப்புகளையும், ஜியோ அல்லாத அழைப்பிற்கு 12,000 நிமிடங்களையும் வழங்குகிறது. இந்த ப்ளானில் தினசரி 100 எஸ்எம்எஸ் செய்திகளும் அடங்கும். மேலும், JioTV, JioCinema மற்றும் JioNews போன்ற Jio செயலிகளுக்கு ஒரு பாராட்டு சந்தா உள்ளது.
ஜியோ தளம் ரூ.2,121 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை பட்டியலிட்டுள்ளது. Google Pay மற்றும் Paytm உள்ளிட்ட பல்வேறு மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் சேனல்கள் மூலமாகவும் சமீபத்திய ப்ளான் கிடைக்கிறது.
ரூ.2,121 ப்ளான் வருகையுடன், டெலிகாம் டாக் கவனித்தபடி, டிசம்பர் மாதத்தில் 2020 இனிய புத்தாண்டு சலுகையின் கீழ் தொடங்கப்பட்ட ரூ.2,020 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை ஜியோ மாற்றியமைக்கிறது. ரூ.2,020 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் ஜியோ-டு-ஜியோ மற்றும் லேண்ட்லைன் அழைப்புகள் மற்றும் 365 நாட்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ் செய்திகளை வழங்கியது. ரூ.2,020 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 15 Pro 5G India Launch Seems Imminent After Smartphone Appears on Geekbench