தொலை தொடர்பு நிறுவனங்களின் இணைய சேவையின் டவுன்லோட் வேகம் பற்றிய அறிக்கையை ஒன்சிக்னல் நிறுவனம் வெளியிட்டது. அதில் 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பிப்ரவரி 2018 வரை உள்ள காலத்தில் ஜியோவின் டவுன்லோட் வேகம் குறைந்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான அறிக்கையில் ஜியோ இந்தியாவிலேயே அதி வேக டவுன்லோட் ஸ்பீட் கொண்ட நெட்வொர்க்காக இருந்தது. தற்போது இணைய பதிவிறக்க வேக பட்டியலில் ஜியோ பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏர்டல், வோடாஃபோன், ஐடியா அகிய, மற்ற மூன்று நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. ஜியோ 4ஜி சேவை மட்டுமே தருகின்றது. ஆனால், மற்ற நிறுவனங்கள் 3ஜி, 2ஜி சேவைகளும் தருவதே ஜியோவிற்கும் மற்ற நிறுவனங்களுக்கும் உள்ள வித்தியாசம்.
ஏர்டெல், ஐடியா, வோடாஃபோன் போன்ற நிறுவனங்களின் வேகம் அதிகரிக்கவில்லை, ஆனால், நாட்டில் 4ஜி LTE நெட்வொர்க் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.. “கடந்த ஆண்டு மே முதல் ஏர்டெல், ஐடியா, வோடாஃபோன் போன்ற நிறுவனங்கள் நிலையான வேகத்தில் இருந்தன. ஆனால், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, இந்த மூன்று நிறுவனங்களின் LTE இணைப்புகளின் வேகம் அதிகரித்தன. LTE நெட்வொர்க் உள்கட்டமைப்பு விரிவடைந்ததே இதற்கு முக்கிய காரணம்” என்றார் ஓபன்சிக்னலின் கெவின் ஃபிட்சார்டு
ஓபன்சிக்னல் ஆய்வில் கூறியிருப்பதாவது, ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்களின் ஒட்டுமொத்த பதிவிறக்க வேகம் அதிரடி முன்னேற்றம் அடைந்துள்ளது என தெரிவித்துள்ளது. அதைப்போல, ஜியோ நிறுவனத்தின் புதிய அலைவரிசையை கொண்டு கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை முதலிடத்தில் இருந்தது. எனினும், பின்பு ஏற்பட்ட வேக குறைவு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் ‘மைஸ்பீட்’ ஆப், பட்டியலிலும் ஜியோவுக்கு பின்னடைவை பெற்றுள்ளது.
“வரும் நாட்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் இடையேயான வேக போட்டி எந்த அளவில் மாற்றங்கள் காண போகிறது என்பதை பார்க்க வேண்டும். இன்னொரு முன்னேற்றம் ஜியோவினால் ஏற்படுத்த முடிந்தால், மீண்டும் முன்னனி நிலைக்கு வரும். அதைப்போன்று ஏர்டெல் நிறுவனமும் LTE இணைப்புகளின் உள்கட்டமைப்பை அதிகரிக்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டு வருகின்றது. சுருக்கமாக, ஜியோவின் வேகத்தின் முன்னேற்றம் இருக்கும் பட்சத்தில், அது பெரிய அளவில் இருக்கும். ஏர்டெலின் வேகம் நிதானமாக முன்னேறும். அதைப்போலவே, ஐடியா மற்றும் வோடாஃபோன் நிறுவனங்களின் 4ஜி முன்னேற்றங்களும் ஒட்டுமொத்த இணைய வேக பட்டியலில் முன்னிலை காணும் வாய்ப்புள்ளது” என்று ஃபிட்சார்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்