ஜியோ டிசம்பர் 6 ஆம் தேதி புதிய ப்ளான் விலைகளை அறிமுகப்படுத்தும்.
பல விலை புள்ளிகளில் டிசம்பர் 6 முதல் "all in one" ப்ளான்களை அறிமுகப்படுத்தப்போவதாக ஜியோ கூறியுள்ளது
அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு, மற்ற நெட்வேர்க்குகளை விட 15-20 சதவிகிதம் மலிவாக இருக்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ கூறியுள்ளது. நிறுவனத்தின் புதிய திட்டங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வர உள்ளன என்று நிறுவனம் திங்களன்று கூறியுள்ளது. மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன், ஜியோ 40 சதவீதம் உயர்த்துவதாகக் கூறியது. ஆனால், மாற்றங்களை முறைப்படுத்தவில்லை. அன்லிமிடெட் குரல் மற்றும் டேட்டாக்களுடன், பல விலைகளில், டிசம்பர் 6 முதல் "all in one" திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக ஜியோ கூறியது. இது முந்தையதை விட 300 சதவீதம் அதிக பலன்களைக் கொண்டிருக்கும்.
"நெட்வேர்க்குகளைப் போலவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பேக்குகள் மட்டுமே (ஜியோவின்) 40 சதவிகிதம் அதிகரிக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம், ஆனால், பிரபலமானவை 25-30 சதவிகிதம் இருக்கக்கூடும். 300 சதவிகித பலம் அதிக டேட்டா கொடுப்பனவுகளை வழங்குவதற்காக ஜியோ பேசிவகிறது என்று நாங்கள் நினைக்கிறோம். 1.5 ஜிபிக்கு அப்பால், பயனர்களை அதிக அளவில் கவர்ந்திழுக்காது என்பதைக் காண்க" என்று பாங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் (Bank of America Merril Lynch) ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.
"இந்த உயர்வுகளுக்குப் பிறகும், ஜியோ தற்போதைய ஆப்ரேட்டர்களை விட 15-20 சதவிகிதம் மலிவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஜியோ டேட்டா கொடுப்பனவுகள் "fair usage policy" கட்டுப்பாட்டில் இல்லை என்றால், எங்கள் கேபெக்ஸ் (capex) முதலீடுகளுக்கு தலைகீழான அபாயங்களைக் காண்கிறோம்" .
வோடபோன் ஐடியா (VIL) மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை அறிவித்த கட்டண உயர்வு எதிர்பார்த்ததை விட சிறந்தது, இது செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். மிகக் குறைந்த மற்றும் மிக உயர்ந்த வகுப்புக் கட்டணங்கள் 41 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டாலும், பிரபலமான திட்டங்கள் 25-30 சதவிகிதம் குறைந்த கட்டண உயர்வைக் கண்டன.
பிரபலமான 1.5 ஜிபி / நாள், 84 நாள் பேக்கிற்கு 31 சதவீதம் கூடுதலாக ரூ. 599 vs ரூ. 458 (பாரதிக்கு 33 சதவீதம் உயர்வு) மற்றும் 25 சதவீதம் உயர்வு ரூ. 199 (இப்போது ரூ. 249 ஆக இருக்கும்), 1.5 ஜிபி / நாள் பேக். ரூ. 1,699-ல் இருந்த் ஆண்டு திட்டம் 41 சதவீத அதிகரித்து இப்போது ரூ. 2,399-க்கு வருகிறது.
சராசரியாக, பாரதி மற்றும் விஐஎல் (VIL) ஆகியவற்றின் கட்டண உயர்வுகளும் இதே அளவிலானவை.
ஜியோ அதன் கட்டணத்தை விவரிக்கிறது, ஏர்டெல் மற்றும் வோடபோன் உயர்வுகளின் பிரீமியம் மிகவும் பிரபலமான கட்டண திட்டங்களுக்கு 10-20 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது என்று கிரெடிட் சூயிஸ் (Credit Suisse ) கூறினார்.
"ஜியோ சந்தை பழுதுபார்ப்பில் பங்கேற்பதற்கான தனது விருப்பத்தையும் அறிவித்துள்ளது. பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் கட்டண உயர்வுக்கு கூடுதலாக, ஜியோ டிசம்பர் 6 முதல் கட்டணங்களை அதிகரிக்கும் நோக்கத்தையும் அறிவித்துள்ளது. அதன் புதிய திட்டங்களின் விவரங்கள் காத்திருக்கையில், நிறுவனம் 'All in one plans'-க்கு இந்த உயர்வு 40 சதவீதம் வரை இருக்கும் என்று கிரெடிட் சூயிஸ் (Credit Suisse ) கூறினார்.
"அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வுகளுக்குப் பிறகு, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் திட்டங்கள் ஜியோவின் அக்டோபர் 2019 'All-in-plans'-களை விட 20-60 சதவீத பிரீமியத்தில் உள்ளன என்பதை நாங்கள் கவனிக்கிறோம். ஜியோ அறிவித்த கட்டண உயர்வுக்குப் பிறகு, மிகவும் பிரபலமான கட்டண திட்டங்களுக்கு 10-20 சதவிகிதம் வரை பிரீமியம் குறைய வாய்ப்புள்ளது" என்று நாங்கள் நினைக்கிறோம்.
வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை தங்களது பிரபலமான தொகுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணங்களை 25-41 சதவிகிதம் உயர்த்தியுள்ளன, அதே போல் குறைந்த விலை திட்டங்களை சுமார் 40 சதவிகிதம் உயர்த்தியுள்ளன.
"அதிக பலன்களுடன் இருந்தாலும் இதேபோன்ற அளவிலான உயர்வுகளை ஜியோ சுட்டிக்காட்டியுள்ளது; விவரங்கள் காத்திருக்கின்றன. புதிய விலை நிர்ணயம் வடிவமைக்கப்பட்டுள்ள முறையை நாங்கள் விரும்புகிறோம் - இது வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது மற்றும் வர்த்தகத்தை ஊக்கப்படுத்துகிறது; இது தொழில்துறையில் சமநிலையை மீண்டும் உருவாக்க உதவும். ஜியோவிலிருந்து எங்கள் மாடல்களின் விவரங்கள் திருத்த நாங்கள் காத்திருக்கிறோம்," கோட்டக் (Kotak) கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show