ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்த பிறகு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஃபைபர் பிராட்பேண்ட் சேவை குறித்த அனைத்து முக்கிய விவரங்களையும் அறிவித்துள்ளது. இந்த சேவையில் மாதந்திர திட்டங்கள் மற்றும் வருடாந்திர திட்டங்கள், என் அனைத்து வகையான வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ப அனைத்து விதமான திட்டங்களையும் அறிவித்துள்ளது. ஜியோ ஃபைபர் திட்டங்கள், ஜியோ போன் லேண்ட்லைன் சேவை, ஜியோ செட்-டாப் பாக்ஸ், 4K டிவி, உள்ளடக்க கூட்டாண்மை, முன்னோட்ட திட்ட இடம்பெயர்வு மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களைப் வெளியிட்டுள்ளது. முன்னர் அறிவித்தபடி, நாடு முழுவதும் 1,600 நகரங்களில் உள்ள நுகர்வோருக்கு ஜியோ ஃபைபர் சேவை சென்றடையவுள்ளது. ஜியோ ஃபைபர் சேவை, சலுகைகள் பற்றிய முழு தகவல்கள் உள்ளே!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த ஜியோ பைபர் சேவையில்மொத்தம் ஆறு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவை வெண்கலம் (Bronze) (மாதத்திற்கு ரூ. 699), வெள்ளி (Silver) (மாதத்திற்கு ரூ .849), தங்கம் (Gold) (மாதத்திற்கு ரூ. 1,299), டயமண்ட் (Diamond) (ரூ. மாதம் 2,499), பிளாட்டினம் (Platinum) (மாதத்திற்கு ரூ .3,999), மற்றும் டைட்டானியம் (Titanium) (மாதத்திற்கு ரூ .8,499). ஜியோ ஃபைபர் வெண்கலம் மற்றும் வெள்ளி திட்டங்கள் 100Mbps டேட்டா வேகத்தை வழங்கும், தங்கம் மற்றும் வைர திட்டங்கள் முறையே 250Mbps மற்றும் 500Mbps இணைய வேகத்துடன் அறிமுகமாகியுள்ளது. பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் திட்டங்கள் இரண்டும் 1Gbps டெட்டா வேகத்தை வழங்கும். இந்த மாதாந்திர திட்டங்களுடன், ஜியோ பைபர் நீண்ட கால 3 மாத, 6 மாத மற்றும் 12 மாத திட்டங்களை கொண்டும் அறிமுகமாகியுள்ளது.
ஜியோ பைபர் திட்டங்கள் ஒவ்வொன்றும் வரம்பற்ற தரவு பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றத்துடன் வரும் என்று நிறுவனம் கூறுகிறது, இருப்பினும் ஒரு FUP இருக்கும், இந்த வரம்பு 100GB அடிப்படை வெண்கலத் திட்டத்திலிருந்து தொடங்கி, 5000GB வரை டாப்-எண்ட் டைட்டானியம் திட்டத்திற்கு இருக்கும். ஆரம்பத்தில், திட்டத்தைப் பொறுத்து 250 ஜிபி வரை இலவச கூடுதல் அதிவேக தரவையும் ஜியோ வழங்கவுள்ளது. இந்த கூடுதல் தரவு ஒவ்வொரு திட்டத்தின் FUP வரம்பிலிருந்து தனித்தனியாக இருக்கும். 1Gbps திட்டங்களுக்கு கூடுதல் இலவச தரவு கிடைக்காது.
இணைய இணைப்பிற்கு கூடுதலாக, ஒவ்வொரு ஜியோ பைபர் திட்டங்களும் நிறுவனத்தின் ஹோம் போன் லேண்ட்லைன் சேவை, டிவி வீடியோ அழைப்பு, கேமிங் மற்றும் சாதனங்களுக்கு நார்டன் வைரஸ் தடுப்பு ஆகியவற்றையும் வழங்குகிறது. குறிப்பாக, ஜியோ பைபர் பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் திட்ட பயனர்கள் ஜியோ விஆர் இயங்குதளம், ஜியோ முதல் நாள் முதல்-காட்சி திரைப்பட சேவை மற்றும் சிறப்பு விளையாட்டு உள்ளடக்கம் ஆகியவற்றிற்கான அனுமதிகளை பெறுவார்கள்.
ஜியோ ஆண்டு திட்டங்களை பெறும் புதிய ஜியோ பைபர் வாடிக்கையாளர்களுக்கான வரவேற்பு சலுகையையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இந்த சலுகையானது இலவச ஜியோ ஹோம் கேட்வே சாதனம் (ரூ .5,000 மதிப்புடையது), ஜியோ 4K செட் டாப் பாக்ஸ் (ரூ .6,400 மதிப்புடையது), இரண்டு மாத கூடுதல் சேவை மற்றும் இரட்டை தரவு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கூடுதலாக, சலுகை வெண்கல சந்தாதாரர்களுக்கான ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோசாவ்ன் (JioSaavn) பயன்பாடுகளுக்கு மூன்று மாத இலவச அனுமதிகளை உள்ளடக்கியது. வெள்ளி திட்ட சந்தாதாரர்கள் OTT பயன்பாடுகளுக்கான மூன்று மாத சந்தாவைப் பெறுவார்கள், தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் திட்ட சந்தாதாரர்கள் OTT பயன்பாடுகளுக்கான இலவச வருடாந்திர சந்தாவைப் பெறுவார்கள். எந்த OTT பயன்பாடுகள் சந்தாவில் சேர்க்கப்படும் என்பது தெளிவாக இல்லை.
மேலும், ஜியோ ஃபோர்வர் கோல்ட் ஆண்டு திட்டத்திற்கான ஜியோ ஃபைபர் சந்தாதாரர்களுக்கு இலவச மியூஸ் 2 புளூடூத் ஸ்பீக்கர் கிடைக்கும். இதேபோல், வெள்ளி ஆண்டு திட்ட சந்தாதாரர்களுக்கு தம்ப் 2 புளூடூத் ஸ்பீக்கர்கள் கிடைக்கும். டயமண்ட், பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் ஆண்டு திட்ட சந்தாதாரர்களுக்கு இலவச எச்டி டிவி கிடைக்கும் (ஒவ்வொரு திட்டத்திற்கும் வெவ்வேறு திரை அளவு). தங்கத் திட்ட சந்தாதாரர்களுக்கு இலவசமாக 24 அங்குல எச்டி டிவியும் கிடைக்கும், ஆனால் அவர்கள் இரண்டு ஆண்டு திட்டத்தை தேர்வு செய்தால் மட்டுமே.
ஆறு மாத திட்டங்கள் ஒரு மாத கூடுதல் சேவை மற்றும் 50 சதவீதம் கூடுதல் டேட்டா, 3 மாத திட்டம் 25 சதவீத கூடுதல் டேட்டா என சலுகைகளை அடுக்கியுள்ளது.
புதிதாக ஜியோ ஜிகாபைபர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், Jio.com தளம் மற்றும் MyJio செயலி ஆகியவற்றின் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இந்த திட்டம் குறித்த முழு தகவல்களும் இந்த இரண்டு தளங்களிலும் இன்று வெளியிடவுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.
ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வமாக ஜியோ பைபர் பிராட்பேண்டை (முன்னர் ஜியோ ஜிகாபைபர் என்று அழைக்கப்பட்டது) வெளியிட்டதன்பின், நுகர்வோரைத் தேர்ந்தெடுப்பதற்காக முன்னோட்ட சலுகையின் (Preview Offer) ஒரு பகுதியாக இந்த சேவை வெளிவந்திருக்கிறது. இந்த ஜியோ பைபரை இப்போது பெற நினைக்கும் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் ரவுட்டர்களை பொறுத்து, இந்த சேவைக்கு 4,500 ரூபாய் அல்லது 2,500 ரூபாயை திரும்ப செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையாக (refundable security deposit) செலுத்த வேண்டும். மேலும், முன்னதாகவே இந்த சேவையை பெற்ற சந்தாதாரர்களுக்கு ஜியோ ஃபைபர் சேவையின் எதிர்கால வசதிகள், சலுகைகள் குறித்து அறிவிப்புகள் உடனுக்குடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MyJio செயலியின் ஒரு அறிவிப்பில், தற்போதுள்ள ஜியோ ஃபைபர் சந்தாதாரர்கள் கட்டண திட்டங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று ரிலையன்ஸ் ஜியோ குறிப்பிட்டுள்ளது. மாற்றம் பற்றிய விவரங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக முன்னதாகவே இந்த சேவையை பெறும் சந்தாதாரர்களை தனித்தனியாக அணுகுகவுள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், இந்த சேவையை முன்னதாகவே பயன்படுத்தும் சந்தாதாரர்கள் தங்களது ஜியோ பைபர் பிராட்பேண்டை எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து பயன்படுத்தலாம். முன்னதாகவே இந்த ஜியோ ஃபைபர் சேவையை பெற்ற சோதனை சந்தாதாரர்கள் மில்லியன் கணக்கில் உள்ளனர் என்று கூறப்படுவதால், ஜியோ உண்மையில் அனைவரையும் தனித்தனியாக அனுக திட்டமிட்டால் மாற்றத்திற்கு சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க: Jio Fiber திட்டத்துடன் வழங்கப்படும் சலுகைகள்
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்