ஜியோ ஃபைபர் செயல்படும் பகுதிகளில் மட்டுமே இலவச பிராட்பேண்ட் ப்ளான் வழங்கப்படும்.
தற்போதுள்ள ஜியோ ஃபைபர் சந்தாதாரர்கள், அனைத்து ப்ளான்களிலும் இரு மடங்கு டேட்டாவைப் பெறுவார்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் #CoronaHaaregaIndiaJeetega முன்முயற்சி மூலம், எந்தவொரு சேவை கட்டணமும் இல்லாமல் அடிப்படை ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை வழங்கும் என்று ஜியோ அறிவித்துள்ளது. புவியியல் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, 10Mbps வேகத்துடன் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும் என்று கூறுகிறது. கூடுதலாக, தற்போதுள்ள ஜியோ ஃபைபர் சந்தாதாரர்கள் அனைத்து ப்ளான்களுக்கும் இரட்டை டேட்டாவைப் பெறுவார்கள். இது போன்ற ஒரு முக்கியமான நேரத்தில், இயக்கம் சேவைகள் எல்லா நேரங்களிலும் தொடர்ந்து இயங்குவதை நிறுவனம் உறுதிப்படுத்த விரும்புகிறது.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு உதவுவதற்கும் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்கும் Reliance இந்த முயற்சியை ஒன்றிணைத்துள்ளது. ஏனெனில் தகவல்தொடர்புக்கான முதன்மை வழிமுறையாக இருப்பது இணையம். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் ஜியோ தனது சேவை பகுதிகளில் வசிக்கும் எவருக்கும் 10Mbps வேகத்தில் அடிப்படை ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை இலவசமாக வழங்கும். இணைய அணுகலில் எந்த மாற்றங்களும் இருக்காது, ஆனால் சந்தாதாரர்கள் திசைவிக்கு (router) கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஹோம் கேட்வே ரவுட்டர்களுக்கு குறைந்தபட்சம் திருப்பிச் செலுத்தக்கூடிய வைப்புத்தொகை வழங்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. தற்போதுள்ள ஜியோ ஃபைபர் சந்தாதாரர்களுக்கு, தொலைத் தொடர்பு ஆபரேட்டர் அனைத்து ப்ளான்களுடனும் இரு மடங்கு டேட்டாவை வழங்கும்.
சமீபத்தில், ஜியோ, 4ஜி டேட்டாக்களுக்கான கூடுதல் வவுச்சர்களில் இரட்டை டேட்டா வழங்குவதாக அறிவித்தது. இந்த வவுச்சர்களில் கூடுதல் செலவு இல்லாமல் ஜியோ அல்லாத குரல் அழைப்பு நிமிடங்களும் இருக்கும். இந்த சேவைகளை தொடர்ந்து இயக்க உதவும் அத்தியாவசிய குழுக்கள் நாடு முழுவதும் சுழற்சி அடிப்படையில் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.
வுஹானில் தொடங்கிய Coronavirus தொற்று உலகம் முழுவதையும் பாதித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த பல நாடுகள் முயற்சி செய்கின்றன. கொரோனா வைரஸால் 3,49,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 15,300-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். 1,00,000 க்கும் அதிகமான மக்கள் அதிலிருந்து மீண்டுள்ளனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Supernova’s First Moments Show Olive-Shaped Blast in Groundbreaking Observations