ஜியோ பதிவிறக்க வேகம் 22.3 Mbps-ஐ தொட்டு தொலைதொடர்பு துறையில் முன்னிலை

விளம்பரம்
Written by Ankit Chawla மேம்படுத்தப்பட்டது: 21 ஜூலை 2018 10:04 IST
ஹைலைட்ஸ்
  • 4ஜி பதிவிறக்க வேகத்தில் ஜீயோவும், பதிவேற்ற வேகத்தில் ஐடியாவும் முன்னணி
  • ஜியோவின் பதிவிறக்க வேகம் மே மாதத்தில் 19 எம்.பீ.பி.எஸ் (ட்ராய் பதிவின் பட
  • ஏர்டெல் நிறுவனம் 9.7 எம்.பீ.பி.எஸ் வேகத்தில் இரண்டாவது இடம்

 

ஜியோவின் பதிவிறக்க வேகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) மை ஸ்பீட் போர்ட்டல் ஜூன் 2018-ற்கு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 4 ஜி டேட்டா வேகத்தில் ஜியோவின் பதிவிறக்க வேகம் 22.3 எம்.பீ.பி.எஸ்ஸாக அதிகரித்துள்ளது. ஜியோவின் பதிவிறக்க வேகம் மே மாதத்தில் 19 எம்.பீ.பி.எஸ் (ட்ராய் பதிவின் படி) ஆக இருந்தது. ஏர்டெல் நிறுவனம் 9.7 எம்.பீ.பி.எஸ் வேகத்தில் இரண்டாவது இடத்திலும், வோடஃபோன் 6.7 எம்.பீ.பி.எஸ் வேகத்தில் மூன்றாவது இடத்திலும், ஐடியா நிறுவனம் 6.1 எம்.பீ.பி.எஸ் வேகத்தில் நான்காவது இடத்திலும் இருக்கிறது.

 

ஏர்டெல் நிறுவனம் மே மாதம் 9.3 எம்பீபிஎஸ் என்பதில் இருந்து சற்று முன்னேறியுள்ளது. வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் கடந்த மாதம் 6.8 எம்பீபிஎஸ் மற்றும் 6.5 எம்பீபிஎஸ் என பதிவாகியதிலிருந்து சற்று சரிந்துள்ளது. ஜியோவில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான சோதனைகளும், ஏர்டெல்லில் 750,000ற்கும் அதிகமான சோதனைகளும், வோடஃபோனில் 300,000ற்கும் அதிகமான சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

மைஸ்பீட் போர்டலின் ஜூன் 2018-ற்கான தரவுகளின் படி பதிவேற்ற வேகத்தில் ஐடியா 5.9 எம்பீபிஎஸ் வேகத்துடன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. வோடஃபோன் 5.3 எம்பீபிஎஸ் வேகத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது, ஜியோ 5.1 எம்பீபிஎஸ் வேகத்தில் மூன்றாவது இடத்திலும், ஏர்டெல் மிகவும் குறைவாக 3.8 எம்பீபிஎஸ் வேகத்திடன் கடைசி இடத்தில் (நான்காவது) இருக்கிறது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஐடியாவின் பதிவேற்ற வேகம் கனிசமாக குறைந்துள்ளது. ஜியோ சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. ஏர்டெல் மற்றும் ஐடியா அதே இடத்தில் இருக்கிறது.

 

 


Photo Credit: TRAI/ MySpeed Portal

 

பயனர்களின் தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான பரிந்துரைகளை ட்ராய் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின் படி டிஜிட்டல் தளத்தில் சேகரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பயனரின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமானது, அந்த பயனருக்கு மட்டும் தான் அதன் மீதான உரிமை உண்டு எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement
 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Jio, Airtel, Idea, Vodafone
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிள் கிட்ட இப்போ 250 கோடி டிவைஸ்கள் இருக்கு! அதுவும் இந்தியா தான் அவங்களோட 'ஃபேவரைட்' இடமாம்
  2. விலை குறைப்புனா இதுதான் விலை குறைப்பு! Samsung Galaxy S24 இப்போ ரூ.31,000 தள்ளுபடியில் அமேசானில் கிடைக்குது
  3. ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஜாக்பாட்! 6,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 Gen 3 சிப்செட் - இப்போ செம மலிவான விலையில்
  4. ரெட்மி-க்கு செம டஃப்! பட்ஜெட் விலையில பிரீமியம் அம்சங்களை அள்ளித் தெளிக்கும் Moto G67 & G77 - நீங்க எதை வாங்குவீங்க?
  5. போனுக்குள்ளேயே ஃபேனா? 7000mAh பேட்டரி வேறயா! பட்ஜெட் விலையில் பிளாக்ஷிப் கேமிங் போன் - REDMAGIC 11 Air வந்தாச்சு
  6. விவோ-வோட அடுத்த அதிரடி! 7,200mAh பேட்டரி, IP69 பாதுகாப்பு - ஆனா இது 5G இல்லையா?
  7. ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் வந்தாச்சு! 200MP கேமரா, IP69 ரேட்டிங்-னு மொரட்டுத்தனமா இருக்கு
  8. சார்ஜ் போட மறந்துட்டீங்களா? கவலையே படாதீங்க! 10,001mAh பேட்டரியுடன் Realme P4 Power 5G வந்தாச்சு
  9. நீங்க ஆவலோட வெயிட் பண்ண Find X9s வராதாம்! ஆனா அதைவிட ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கு
  10. சாம்சங் ரசிகர்களே ரெடியா? Galaxy S26 சீரிஸின் விலை விவரங்கள் இதோ! Ultra மாடல் விலை குறையப்போகுதா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.