ஜியோவின் பதிவிறக்க வேகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) மை ஸ்பீட் போர்ட்டல் ஜூன் 2018-ற்கு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 4 ஜி டேட்டா வேகத்தில் ஜியோவின் பதிவிறக்க வேகம் 22.3 எம்.பீ.பி.எஸ்ஸாக அதிகரித்துள்ளது. ஜியோவின் பதிவிறக்க வேகம் மே மாதத்தில் 19 எம்.பீ.பி.எஸ் (ட்ராய் பதிவின் படி) ஆக இருந்தது. ஏர்டெல் நிறுவனம் 9.7 எம்.பீ.பி.எஸ் வேகத்தில் இரண்டாவது இடத்திலும், வோடஃபோன் 6.7 எம்.பீ.பி.எஸ் வேகத்தில் மூன்றாவது இடத்திலும், ஐடியா நிறுவனம் 6.1 எம்.பீ.பி.எஸ் வேகத்தில் நான்காவது இடத்திலும் இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் மே மாதம் 9.3 எம்பீபிஎஸ் என்பதில் இருந்து சற்று முன்னேறியுள்ளது. வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் கடந்த மாதம் 6.8 எம்பீபிஎஸ் மற்றும் 6.5 எம்பீபிஎஸ் என பதிவாகியதிலிருந்து சற்று சரிந்துள்ளது. ஜியோவில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான சோதனைகளும், ஏர்டெல்லில் 750,000ற்கும் அதிகமான சோதனைகளும், வோடஃபோனில் 300,000ற்கும் அதிகமான சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மைஸ்பீட் போர்டலின் ஜூன் 2018-ற்கான தரவுகளின் படி பதிவேற்ற வேகத்தில் ஐடியா 5.9 எம்பீபிஎஸ் வேகத்துடன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. வோடஃபோன் 5.3 எம்பீபிஎஸ் வேகத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது, ஜியோ 5.1 எம்பீபிஎஸ் வேகத்தில் மூன்றாவது இடத்திலும், ஏர்டெல் மிகவும் குறைவாக 3.8 எம்பீபிஎஸ் வேகத்திடன் கடைசி இடத்தில் (நான்காவது) இருக்கிறது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஐடியாவின் பதிவேற்ற வேகம் கனிசமாக குறைந்துள்ளது. ஜியோ சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. ஏர்டெல் மற்றும் ஐடியா அதே இடத்தில் இருக்கிறது.
பயனர்களின் தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான பரிந்துரைகளை ட்ராய் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின் படி டிஜிட்டல் தளத்தில் சேகரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பயனரின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமானது, அந்த பயனருக்கு மட்டும் தான் அதன் மீதான உரிமை உண்டு எனவும் தெரிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்