ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவுடன் ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் ப்ளான் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 15 மே 2020 13:13 IST
ஹைலைட்ஸ்
  • ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் ப்ளானை கொண்டு வந்துள்ளது
  • 3 ஜிபி டேட்டா தீர்ந்துவிட்டால், ​​வேகம் 64 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்
  • இந்த ப்ளானின் வேலிடிட்டி 64 நாட்கள் ஆகும்

ரூ.999 ப்ரீபெய்ட் ப்ளானில் தினசரி 3 ஜிபி டேட்டா தீர்ந்துவிட்டால், வேகம் 64 கி.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.

Jio, ரூ.999-க்கு புதிய ப்ரீபெய்ட் ப்ளானை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த ப்ளான் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 64 நாட்கள் ஆகும். கூடுதலாக, ரூ.999 ப்ரீபெய்ட் ப்ளானில், அனைத்து ஜியோ எண்களுக்கும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் செய்யலாம்.

ரூ.999 ப்ரீபெய்ட் ப்ளானில் தினசரி 3 ஜிபி டேட்டா தீர்ந்துவிட்டால், வேகம் 64 கி.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். இந்த ப்ளானை MyJio app மற்றும் Google Pay அல்லது Paytm போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளில் இருந்து ரீசார்ஜ் செய்யலாம். கூடுதலாக, ரூ.349 ப்ளானில் ஒவ்வொரு நாளும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். அந்த ப்ளானில் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

கொரோனா வைரஸ் ஊரடங்கால், எல்லோரும் வீட்டில் வேலை செய்து வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, ஜியோ ரூ.2,399-க்கு புதிய ப்ரீபெய்ட் ப்ளானை கொண்டு வந்துள்ளது. இந்த ப்ளான் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது 365 நாட்கள் செல்லுபடியாகும். மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளானுடன் "ஒர்க் ஃப்ரம் ஹோம்" ஆட்-ஆன் பேக்கைக் கொண்டு வந்துள்ளது. இந்த ப்ளான்களில், கூடுதலாக 50 ஜிபி டேட்டாவை ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 என்ற விலையில் பயன்படுத்தலாம்.

ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளானில் பயன்படுத்தலாம். இது, அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உடன் வருகிறது. இந்த ப்ளானின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். நிறுவனம் பிப்ரவரியில் ரூ.2,121 ப்ளானைக் கொண்டு வந்தது. அந்த ப்ளானில் ஜியோ ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை 336 நாட்களுக்கு வழங்கியது.


Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Rs 999 Jio prepaid recharge plan, Reliance Jio, Jio
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.